Tuesday, April 16, 2024 10:48 am

துணிவு படத்தின் ரியல் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் அதிகாரப்பூர்வ அறிவுப்பு இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விக்னேஷ் சிவன் ‘போடா போடி’ படத்தில் அறிமுகமானதில் இருந்தே மிகவும் பொழுதுபோக்கு திரைப்பட தயாரிப்பாளராக தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார். தொடர்ந்து அவர் நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை அ வினோத் இயக்கியுள்ளார்.திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகியுள்ளது.பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியதோடு ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற துணிவு படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சிவா காம்போவில் தொடர்ந்து 4 படங்கள் நடித்த அஜித், அடுத்து அ வினோத்துடன் கூட்டணி வைத்தார். அதன்படி இந்த காம்போவில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து மூன்றாவது முறையாக இணைந்த இந்தக் கூட்டணியில் கடந்த மாதம் 11ம் தேதி துணிவு திரைப்படம் வெளியானது. பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸான துணிவு, விஜய்யின் வாரிசு படத்துடன் துணிவாக மோதி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது.

வங்கிகளில் நடக்கும் பண மோசடி, பங்குச் சந்தை, மியூச்சல் ஃபண்ட், கிரடிட் கார்டு போன்றவைகளால் எளிய மக்களின் பணம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை பேசியது இத்திரைப்படம். டார்க் டெவிலாக ஆக்‌ஷனில் மிரட்டிய அஜித், நீண்ட இடைவேளைக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸிலும் ரியலான சம்பவம் செய்தார். இந்தப் படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் ஸ்ட்ரீமிங் ஆனது துணிவு. கடந்த 8ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியான துணிவு, ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

அதேபோல் உலக அளவிலான பட்டியலிலும் டாப் 10ல் இடம்பிடித்தது துணிவு. பாக்ஸ் ஆபிஸ் மட்டுமின்றி ஓடிடியிலும் ஹிட்டடித்த துணிவு படம் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நல்ல லாபம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவருக்கு 80 முதல் 85 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து லைகா தயாரிக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்தப் படத்தின் அப்டேட் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் துணிவு வெற்றியால் ஏகே 62 படத்துக்கான சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம் அஜித். அதன்படி ஏகே 62 படத்துக்காக 110 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாம். மொத்தமாக 220 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ஏகே 62 படத்துக்காக அஜித் மட்டுமே 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கப்படுவதாக வெளியான தகவல் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் துணிவு படத்தின் மொத்த பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

- Advertisement -

சமீபத்திய கதைகள்