Sunday, April 28, 2024 2:24 am

அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க போகும் அஜித் !! ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த அந்த தருணம் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

220 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அஜித்தின் மகிழ் திருமேனி படம் உருவாகவுள்ளது, மேலும் 2023 தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மகிழ் திருமேனி ஏகே 62-ல் பெரும் சம்பளம் வாங்கியுள்ளார். தனிப்பட்ட முறையில், AK தனது உலக பைக் சுற்றுப்பயணத்தை முடிக்க நடிப்பிலிருந்து ஒரு இடைவெளி எடுப்பார் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 படத்தை நான் தான் பண்றேன் என சமீபத்தில் நடந்த ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியிலும் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். மேலும், நடிகர் அஜித் தனக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருப்பதாகவும், உங்க ஸ்டைல்ல படம் பண்ணுங்க எதுக்கும் கவலைப்படாதீங்க என ஊக்கப்படுத்தியதையும் சொல்லி இருந்தார்.

ஆனால், திடீரென லைகா நிறுவனம் மற்றும் நடிகர் அஜித்துக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனின் திரைக்கதையில் நம்பிக்கை வரவில்லை என்றும் அவரது அணுகுமுறை சரியாக இல்லை என்றும் அதீத காலத்தை வீணடித்து விட்டார் போன்ற குற்றச்சாட்டுக்களை அடுக்கி அவரை ஏகே 62 படத்தில் இருந்தே வெளியே அனுப்பி விட்டனர் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.

அது சும்மா வதந்தியாக இருக்கும் அதெல்லாம் அஜித் அப்படி விக்னேஷ் சிவனை ஒப்பந்தம் செய்து விட்டு மாற்றமாட்டார் என கடைசி வரை நம்பிக் கொண்டிருந்த விக்னேஷ் சிவன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும்படி தற்போது ஏகே 62 படத்தில் இருந்து தான் வெளியேறிய விஷயத்தை உறுதிப்படுத்தி உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், நடிகர் அஜித்தின் புகைப்படத்தை டுவிட்டர் கவர் பிக்சராக வைத்திருந்தார். இந்நிலையில், தற்போது அதிரடியாக அந்த போட்டோவை விக்னேஷ் சிவன் நீக்கிவிட்டு புதிய கவர் பிக்சரை வைத்துள்ளார். புதிய புகைப்படமாக “Never Give up” என்கிற வாசகம் அடங்கிய மோடிவேஷனல் மாற்றி உள்ளார். இதன் மூலம் தான் ஏகே62 படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை அவர் மறைமுகமாக அறிவித்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“அசல்” திரைப்படத்திற்கு பிறகு அஜித் குமார் தனது திரைப்படத்தின் புரோமோஷன்களில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டார். அதே போல் எந்த பேட்டிகளிலும் அஜித் கலந்துகொள்வதும் இல்லை.பல வருடங்களுக்கு முன்பே ரசிகர் மன்றங்களையும் கலைத்துவிட்டதால் ரசிகர்களை சந்திப்பதையும் அஜித் நிறுத்திக்கொண்டார். மேலும் அஜித் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை. இவ்வாறு வெளியுலகத்துக்கே தன்னை வெளிகாட்டிக்கொள்ளக்கூடாது என்ற முடிவில் அஜித் இருக்கிறார்.

எனினும் அஜித் குமார் பைக் ரேஸ் செல்லும்போதோ, விமான நிலையத்தில் தென்படும்போதோ சில புகைப்படங்கள் வெளிவரும். அதனை பார்த்துத்தான் ரசிகர்கள் ஆசுவாசமடைவார்கள்.“துணிவு” திரைப்படத்தின் புரோமோஷனுக்கு கூட அஜித் பத்திரிக்கையாளர்களையும் ரசிகர்களையும் சந்திக்க உள்ளார் என்று ஒரு தகவல் வெளிவந்தது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் குஷி ஆனார்கள். ஆனால் இந்த முறையும் ரசிகர்கள் ஏமாந்துப்போனார்கள்.

இந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அந்த தருணம் விரைவில் வரவுள்ளதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.அதாவது வெகு காலத்திற்குப் பிறகு அஜித் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளாராம். இந்த சந்திப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறியுள்ளார். அதே போல் அந்த சந்திப்பில் அஜித், தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனவாம். செய்யாறு பாலுவின் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

விக்னேஷ் சிவன் ஆரம்பத்தில் ஏகே62 ரக விமானத்தை இயக்க இருந்தார். இந்நிலையில், அஜித் குமார் படத்தை இயக்க மகிழ் திருமேனி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விக்னேஷ் தனது ட்விட்டர் பயோவிலிருந்து AK62 ஐ நீக்கிய பிறகு, இந்த திட்டத்தின் விவரங்கள் குறித்து லைகா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக நெட்டிசன்கள் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்