Saturday, April 27, 2024 2:56 pm

போடுறா வெடிய மீண்டும் கடத்தல் “DON” ஆக மாறும் அஜித் !! ஏ கே 62 படத்தின் கதை இதுவா ? செம அப்டேட்..

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமார் தற்போது தனது 62வது படத்திற்கு தயாராகி வருகிறார். ஆரம்பத்தில், படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவன் அறிவிக்கப்பட்டார், ஆனால் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தயாரிப்பாளர் மகிழ் திருமேனி AK62 இல் இயக்குனர் தொப்பியை அணிவார் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.ஏகே62 படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் இப்போது, முதன்முறையாக அஜித்திற்கு அருண்ராஜ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அருண்ராஜ் ஏற்கனவே ‘தடம்’ படத்தில் மகிழ் திருமேனியுடன் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகே 62 படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவனும், இசையமைப்பாளராக அனிருத்தும் கமிட் ஆகியுள்ளதாக லைகா தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், ஏகே 62 படத்திற்காக விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கும் உடன்பாடில்லை என்பதால் மகிழ் திருமேனி இயக்குநராக கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

துணிவு படத்தில் தரமான ஹிட் கொடுத்த அஜித், அடுத்து தனது 62வது படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ரெடியாகிவிட்டார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. மேலும் அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருந்தார். இந்நிலையில், திடீர் திருப்பமாக விக்கி சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கும் திருப்தி இல்லையென்று சொல்லப்படுகிறது. அதனால் அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி சொன்ன கதையில் அஜித் நடிக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஏகே 62 ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி சீனில் வந்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது. தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி, அஜித்தே எதிர்பார்க்காத தரமான கதையை கூறியுள்ளாராம். இதுதான் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க காரணம் என சொல்லப்படுகிறது. மேலும், ஏகே 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கலாம் எனவும், இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ் திருமேனியின் படங்கள் அனைத்துமே ஆக்‌ஷன் ஜானரில் தான் வெளியாகியுள்ளன. அதேபோல் ஏகே 62 படமும் தரமான ஆக்‌ஷன் ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மொத்தம் ரூ.220 கோடி பட்ஜெட்டை லைகா நிறுவனம் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அஜித்துக்கு மட்டுமே 105 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதேபோல் மகிழ் திருமேனிக்கும் இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாம். துணிவு வெற்றியும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனும் ஏகே 62 படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் என்றே பார்க்கப்படுகிறது.

லைகா தயாரிப்பில் ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியான போது, இயக்குநராக விக்னேஷ் சிவனும் இசையமைப்பாளராக அனிருத்தும் மட்டுமே கமிட்டாகியிருந்தனர். இந்நிலையில், தற்போது ஏகே 62ல் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதால், அனிருத்தும் இந்தப் படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் வெற்றிகரமான கூட்டணியாக வலம் வந்த விக்னேஷ் சிவனும் அனிருத்தும் ஏகே 62ல் இருந்து விலகியதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அனிருத்துக்கு பதிலாக தடம் படத்தின் இசையமைப்பாளர் அருண் ராஜ் ஏகே 62ல் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

220 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அஜித்தின் மகிழ் திருமேனி படம் உருவாகவுள்ளது, மேலும் 2023 தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மகிழ் திருமேனி ஏகே 62-ல் பெரும் சம்பளம் வாங்கியுள்ளார். தனிப்பட்ட முறையில், AK தனது உலக பைக் சுற்றுப்பயணத்தை முடிக்க நடிப்பிலிருந்து ஒரு இடைவெளி எடுப்பார் என்று அறிக்கைகள் கூறுகின்றன.


இந்நிலையில் மீகாமன் படத்தின் 2 பார்ட் கதை போன்று அஜித் 62 படத்தின் கதை ஒன்று அஜித் சாரிடம் குறி ஓகே வங்கியுள்ளாராம் மகிழ் திருமேனி இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது

அந்த படத்தில் ஆர்யா சிபிஐ அதிகாரியாக மிரட்டி இருப்பார் .அப்பவே அந்த படம் விக்ரம் படத்தை மிஞ்சும் அளவிற்கு என்பது குறிப்பிடத்தக்கது AK 62 இன் திரையரங்குக்கு பிந்தைய OTT உரிமைகள் Netflix இல் உள்ளன. இப்படம் 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் விஜய்யின் தளபதி 67 பாக்ஸ் ஆபிஸில் சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்