28.3 C
Chennai
Thursday, March 23, 2023

போட்டின்னு வந்துட்டா நான் தான் எப்பவும் King Maker😎 !ஒரே நாளில் பாக்ஸ் ஆபீஸ்சை நிரப்பிய துணிவு !!ஹாட் ட்ரிக் ஹிட் அடித்த அஜித்

Date:

தொடர்புடைய கதைகள்

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

கேப்டன் மில்லர் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்...

சமீபத்திய தகவல்களின்படி, கேப்டன் மில்லரின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குற்றாலத்தில் சுமார் 1000...

வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வாரிசு ’ திரைப்படம் கோலிவுட்டில் இயக்குனரின் முதல் படம். அவர் இன்று ஜனவரி 11 அன்று சென்னையில் ரசிகர்களுடன் திரைப்படத்தின் FDFS ஐப் பார்த்தார், அதன் விளைவு மற்றும் விஜய்யின் படத்திற்கு ரசிகர்கள் அளித்த பதிலில் இயக்குனர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வம்ஷி பைடிபள்ளி, ‘வரிசு’ ஸ்கிரிப்டை சொல்லும் போது விஜய் ஒரு நிமிடம் யோசித்து, ‘வரிசு’ ஸ்கிரிப்ட்க்கு சரி என்று கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் ஒரு பெரிய நட்சத்திரம் என்றாலும், படத் தொகுப்புகளில் அவர் அப்படி நடந்துகொண்டதில்லை என்றும் இயக்குனர் கூறியதாக கூறப்படுகிறது. நடிகரைப் பாராட்டிய அவர், விஜய் எப்போதும் தொழில்முறைத் திறனைக் கடைப்பிடிப்பதாகவும், தனது காட்சிகளை கச்சிதமாக வழங்குவதாகவும் கூறினார்.


இந்த படங்கள் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. என்றாலும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கக்கூடிய துணிவு திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களையும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் க லவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

முன்னதாக நடிகர்கள் விஜய், அஜித் நடிப்பில் வெளியான வீரம் மற்றும் ஜில்லா திரைப்படங்கள் இரண்டும் மோதிக்கொண்டன இந்த இரண்டு திரைப்படங்களிலும் வீரம் திரைப்படம் ஹிட் அடித்தது.அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான விசுவாசம் மற்றும் பேட்ட ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டன இதில் விசுவாசம் திரைப்படம் அதிக வசூல் பெற்று வெற்றி பெற்றது.

தற்பொழுது வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் துணிவு திரைப்படத்தின் கையை ஓங்கி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.விமர்சன ரீதியிலும் சரி.. வசூல் ரீதியிலும் சரி.. வாரிசை விட துணிவு திரைப்படம் ஒருபடி மேலே இருக்கிறது. விமர்சனம் பற்றி பார்த்து விட்டோம் தற்பொழுது இந்த படங்களின் வசூல் பற்றி பார்ப்போம்.

ஏனெனில், விஜய்யின் வாரிசு படம் திருச்சியில் 37 லட்சம் வரை முதல் நாள் வசூல் செய்ய, துணிவு முதல் நாள் ரூ 65 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.தற்போது வந்த தகவல்படி அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 25 கோடி, விஜய்யின் வாரிசு ரூ. 22 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்து ஆண்டு அமெரிக்காவில் வெளியான வலிமை படத்தின் மொத்த வசூலை, ஒரே நாளில் அங்கு துணிவு திரைப்படம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.தற்போது வரை துணிவு $400K வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது. இந்நிலையில் துணிவு திரைப்படம் ஒரே நாளில் அமெரிக்காவில் மட்டும் $400K வசூலித்துள்ளதாம்.

இதைதொடர்ந்து கர்நாடகாவிலும் நேற்று வெளியான துணிவு திரைப்படம் இதுவரை 5 கோடி வரை வசூலித்ததாக தகவல் வெளியாகிவுள்ளது. இதன் மூலம் வாங்கிய தொகையை ஒரே நாளில் துணிவு திரைப்படம் வசூல் செய்துள்ளது. தற்போது படம் மலேசியா மக்களுக்கு மிகவும் பிடித்து போக, இன்னும் 3 லொக்கேஷன் அதிகமாக்கியுள்ளார்களாம்.

இதனால், ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளார்கள் என கூறப்படுகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 39 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. மறுபக்கம் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள துணிவு திரைப்படம் 42 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.இங்கே விமர்சன வீதியிலும் வசூல் ரீதியிலும் வாரிசை விட ஒரு படி முன்னே நிற்கிறது துணிவு. இந்த வெற்றியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எச்.வினோத் இயக்கிய ‘துணிவு’ படத்தில் அஜித் ஒரு கெட்டியாக நடித்துள்ளார், மேலும் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மோகன சுந்தரம், ஜான் கொக்கன், வீரா மற்றும் தர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மறுபுறம், வம்ஷி பைடிப்பள்ளி இயக்கிய, ‘வரிசு’ ஒரு தொழிலதிபராக விஜய் நடித்துள்ளார், அதே நேரத்தில் குடும்ப நாடகத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், பிரபு மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்திய கதைகள்