Saturday, April 27, 2024 1:24 pm

“துணிவு ” படத்தை பார்த்து விட்டு மிரண்டுபோய் விமர்சனத்தை சொன்ன பிரபலம் !! என்ன சொன்னார் தெரியுமா.? நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எச் வினோத் இயக்கிய துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், மகாநதி சங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அஜித்துடன் கூட்டணி அமைத்து நேர்கொண்ட பார்வை வலிமை ஆகிய திரைப்படங்களை எடுத்தார் இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் ஒருமுறை அஜித்தும் வினோத்தும் கைகோர்த்து துணிவு திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணமே இருக்கின்றன. இந்த படத்தை பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் இருப்பினும் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்ய பட குழு திட்டமிட்டு இருக்கிறது

அதன்படி வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி மிகப் பிரமாண்டமான முறையில் துணிவு படத்தின் பிரமோஷன் விழா நடைபெற இருக்கிறது இதில் அஜித் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை ஆனால் மற்றபடி இந்த படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.

இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா பாடல் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ள நிலையில் கேங்ஸ்டா என்ற பாடல் இன்று வெளியாக உள்ளதாக பட குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

அந்த வகையில் இன்று ஏழு மணிக்கு வெளியாக இருந்த கேங்ஸ்டர் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் துணிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கேங்ஸ்டா பாடலின் தீம் சாங் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகிய நிலையில் தற்போது துணிவு படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது. மிரட்டலாக உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அஜித் அவர்கள் இந்த பாடலில் ஒரு மாஸ் கெட்டப்பில் தெறிக்கவிடும் லுக்கில் இருக்கிறார்.

மேலும் படத்தின் இயக்குனர் ஹச். வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கலந்து கொள்வார்கள் என தெரிய வருகிறது. நடிகர் அஜித் இதுவரை ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் திடீரென ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுக்கும் விதமாக கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்

இதுவரை இப்படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படத்தை வாங்கியுள்ள கேரளா விநியோகஸ்தர்கள் முதல் முறையாக படத்தை போட்டு பார்த்துள்ளனர்.முதல் 20 நிமிடங்கள் மட்டுமே பார்த்துவிட்டு மிரண்டுபோய்விட்டார்களாம். இதனால் துணிவு படத்தின் மேல் அதீத நம்பிக்கை வைத்துள்ளதாக ரிசல்ட் வெளியாகியுள்ளது.ஆக மொத்தம் இந்த பொங்கல் கண்டிப்பாக துணிவு பொங்கல் தான் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்

இந்நிலையில் துணிவு படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 23 நிமிடம் என அதிகாரப்பூர்வ அறிவுப்பு வந்துள்ளது துணிவு படத்திற்கு U/A சான்றிதழ்கள் வழங்கி உள்ளார்காலம்

இந்நிலையில் துணிவு படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா துணிவு படத்தை பார்த்து அவர் போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.


அஜித்தின் வரவிருக்கும் ஹீஸ்ட் த்ரில்லர் ‘துனிவு’ ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கிய இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, படம் அஜித்தை எதிர்மறையாக சித்தரிக்கப் போகிறது. நிழல். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் இப்படத்தில் பல சண்டைக் காட்சிகள் உள்ளன மற்றும் படத்திற்கு ஸ்டண்ட் இயக்கியவர் சுப்ரீம் சுந்தர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்