Sunday, June 4, 2023 2:26 am

நெகடிவ் விமர்சனங்கள் பற்றிய அஜித்தின் பார்வை பற்றி வினோத் கூறிய அந்த ஒரு வார்த்தை என்ன தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

சிம்பு பாடிய டக்கர் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

சிலம்பரசன் டிஆர் மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா ஆகியோர் சித்தார்த் நடித்த டக்கர்...

நிகில் சித்தார்த்தா நடித்த சுயம்பு படத்தின் முதல் மோஷன் போஸ்டர் இதோ !

நிகில் சித்தார்த்தா தனது 20வது படத்தின் தலைப்பை இறுதியாக வெளியிட்டுள்ளார். ஸ்வயம்பு...

சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்! செவி சாய்ப்பரா அஜித்!எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...
- Advertisement -

அஜீத் நடித்துள்ள ‘துணிவு ‘ பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தற்போது ‘சில்லா சில்லா’ என்ற முதல் சிங்கிளையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். வைசாக் பாடல் வரிகளை எழுதியுள்ளார், ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் பாடிய ‘சில்லா சில்லா’ இசை ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் செம்ம மாஸாக நடித்துள்ளார். படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இருந்து இதுவரை பர்ஸ்ட் லுக், செகண்ட் போஸ்டர்கள் வெளிவந்தன அதனைத் தொடர்ந்து அண்மையில் சில்லா சில்லா பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளும் படக்குழு கொடுக்க இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு இயக்குனர் வினோத் அண்மையில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அதில் ஒன்றாக விமர்சனங்கள் குறித்து தனது கோபத்தை வெளியே கொட்டி உள்ளார் ஹச் வினோத் அவர் கூறியது..

ஒரு இயக்குனராக படத்தின் மீது உள்ள விமர்சனங்களை கேட்க வேண்டியது என்னுடைய கடமை விமர்சனங்களை மண்டைக்குள் ஏற்றிக்கொள்ள மாட்டேன்.. நியாயமான விமர்சனங்களை கேட்பேன் முடிந்தால் திருத்திக் கொள்வேன் ஆனால் தற்பொழுது உள்ள விமர்சனங்கள் எல்லாம் அரிவாளை எடுத்துவெட்டும் அளவுக்கு வன்மமாக மாறிடுச்சு அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்து போவதே சரி என நினைக்கிறேன்.

மேலும் பேசிய அவர் வலிமை தோல்வி படமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் வலிமையில் ரிலீசான பொழுது கலவையான விமர்சனங்கள் வந்தது உண்மைதான் ஆனால் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு படம் பிடித்து போனது பணம் போட்ட தயாரிப்பாளர்கள் தொடங்கிய அனைவருமே அதை வெற்றி படமாக அமைந்தது. நான் பார்த்த வேலைக்கான வெற்றியை வலிமை எனக்கு கொடுத்தது என்பது தான் உண்மை என கூறினார்.

எச் வினோத் இயக்கத்தில், ‘துணிவு’ அஜித்துடன் இயக்குனரின் மூன்றாவது தொடர்ச்சியான படத்தைக் குறிக்கிறது, மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கன், அஜய் மற்றும் சிபி சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதற்கிடையில், 2023 பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ‘வாரிசு ‘ படத்துடன் ‘துணிவு ‘ மோதவுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்