எச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோவுடன் இணைந்து போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜிப்ரானுடனான தொடர்பு குறித்து விவேகா கூறுகையில், “அவர் எனக்கு நல்ல நண்பர். அவரது இசையமைப்பில் என்னால் அற்புதமான பாடல்களை வழங்க முடிந்தது. தாரமே தாரமே (கடாரம் கொண்டானில் இருந்து) 100 மில்லியனைத் தாண்டியுள்ளது. அடுத்ததாக நான் எழுதியது அஜித்குமார் நடித்த துணிவு படத்தின் பாடல்.”
இப்படத்தில் முதன்முறையாக ஜான் கொக்கன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவரும் அஜித்தும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி மிக பெரிய ரீச்சை பெறும் என்றும் அதை தொடர்ந்து ஆக்ஷன் காட்சிக்கு தியேட்டரே அதிரும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்காக ஜான் கொக்கன் சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கிறார்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாக இருக்கிறது. சில்லா சில்லா என்னும் பாடலை இப்படத்தில் அனிருத் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களுக்கு பிறகு தை பொங்கலுக்கு விஜயின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படம் மோத இருக்கிறது. இரு ரசிகர்களும் இந்த சந்தோஷத்தை கொண்டாட ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள அஜித் அறிமுக பாடலான ‘சில்லா..சில்லா’ பாடலின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாகவும் இதில் அஜித் கலந்துகொண்டு நடனம் ஆட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.
இந்நிலையில் துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா சிங்கிள் அடுத்த மாதமான டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் 1 அல்லது 4 தேதி வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .
#Thunivu Blast Updates will come one by one from December First Week 🎧 🔊🥁#ThunivuPongal ❤️🔥
— Nelson Ji (@Nelson_Ji) November 23, 2022
அஜித்தின் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவடையும் எனவும், படம் வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நாளை துணிவு படத்தின் ரீலிஸ் தேதியுடன் மூன்றாவது போஸ்டர் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது ..ஏனென்றால் நாள் துணிவு படத்தின் படப்பிடிப்பு கடைசி நாள் உள்ளதால் நாளை கண்டிப்பாக வெளியாகலாம் என்று கூறப்படுகிறது ..மூன்றாவது போஸ்டரில் அஜித் மேல் ரத்தம் தெறிக்க தெறிக்க படு மஸான ஸ்டில் எனவும் கூறப்படுகிறது .
#Thunivu – Ratham Therika Therika oru poster loading tomorrow/Wednesday..🔥🤩
Thala #AjithKumar 💥#HVinoth | #Ghibran | #ManjuWarrier
— Laxmi Kanth (@iammoviebuff007) November 28, 2022
Poster With Release Date…
Tomorrow Or Day After Tomorrow…
💯#Thunivu #AK— Rajasekar R (@iamrajesh_sct) November 28, 2022
எச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோவுடன் இணைந்து போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். துணிவு திரைப்படம் 2023 பொங்கல் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் இது. வரவிருக்கும் படம் ஒரு ஹீஸ்ட் த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஞ்சு கதாநாயகியாக நடிக்கும் போது, வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷாவும், படத்தொகுப்பு வேலுக்குட்டியும் செய்துள்ளார்.