Sunday, April 28, 2024 8:08 pm

இருக்கு அது கண்டிப்பாக இருக்கு !! துணிவு திரைப்படத்தின் மாஸ் அப்டேட் சொன்ன உதயநிதி!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரின் துணிவு திரைப்படம் 2023 பொங்கல் அன்று திரைக்கு வர உள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் ஒரு போஸ்டருடன் வெளியீட்டு தேதியை அறிவித்தார். இப்படத்தை தமிழ்நாட்டில் விநியோகிக்க படக்குழு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இப்படம் பொங்கல் அன்று தளபதி விஜய்யின் வாரிசு படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதவுள்ளது. அஜீத்துக்கும் விஜய்க்கும் இடையே ரசிகர்கள் மோதலை கண்டு பல வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில் பிரபல தனியார் நிறுவனத்திற்கு உதயநிதி பேட்டி கொடுத்தார் அதில் அவர் கூறியது துணிவு படத்தை ரெடி ஜெயண்ட் மூவிஸ் தான் வாங்கியிருக்கிறது. வாரிசு பட தமிழ் நாடு உரிமம் யார் கைக்கு போக போகிறது என்று இதுவரை ஒரு தெளிவான அப்டேட் இல்லை. இருந்தாலும் அந்த படமும் ரெட் ஜெயண்டுக்கு போக வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி உதய நிதியிடம் நேற்று ஒரு பேட்டியில் சந்தித்த போது சில தகவல்களை கூறினார். அதாவது துணிவு என் கையில் தான் இருக்கிறது என்றும் வாரிசு யாரோ ஒருத்தர் வாங்கி விற்க போவதாகவும் பேச்சு வருகிறது. ஆனால் இதுவரை வாரிசு படம் பற்றி இன்று வரை யாரும் என்னிடம் பேசவில்லை என்று கூறினார்.

அதன் பின் குறுக்கிட்டு ஒரு நிரூபர் ‘இரண்டு மாஸ் ஹீரோக்களின் படம் ஒன்றாக வருகிறது. அதை நீங்களே வாங்கினால் எப்படி சமாளிப்பீர்கள்’ என்று கேட்க இதை கேட்டதும் டென்ஷனான உதயநிதி ‘ஏங்க மாஸ் ஹீரோக்கள்னா என்னங்க, இதற்கு முன் அவர்கள் படங்கள் ஒன்றாக வந்ததில்லையா? அப்படியே என் கையில் வந்தாலும் தமிழ் நாட்டில் 1100 தியேட்டர்கள் உள்ளது. இருவருக்கும் சமமாக பிரித்து 550, 550 என பிரித்து ரிலீஸ் செய்யப்போகிறோம்’ என்று சற்று உரக்கமாக கூறினார். மேலும் முதலில் என் கைக்கு வாரிசு வருகிறதா என்று பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.

துணிவு எச் வினோத் எழுதி இயக்கிய ஒரு ஹை-ஆக்டேன் ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்