தமிழ் சூப்பர் ஸ்டார் அதன் டப்பிங்கை முடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அஜித்குமாரின் தீவிர ரசிகர்கள் அவரது வரவிருக்கும் திரைப்படமான துணிவு பற்றிய அதிகாரப்பூர்வ புதுப்பிப்புக்காக காத்திருக்கிறார்கள். படத்திலிருந்து சில்லா சில்லா என்ற வேகமான நடனம் குழந்தைகள் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. இப்போது, திரைப்பட விமர்சகரும், வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினருமான உமைர் சந்து, எச்.வினோத் இயக்கம் தொடர்பான தனது சமீபத்திய ட்வீட்டின் மூலம், துணிவு பற்றிய ரசிகர்களின் உற்சாகத்தை ஒரு படி உயர்த்தியுள்ளார்.
Watching #Thunivu Final Cut Trailer 🔥🕺🏻❤️
— Umair Sandhu (@UmairSandu) November 10, 2022
இந்நிலையில் இந்த பாடல் படப்பிடிப்பில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “துணிவு படப்பிடிப்பு.. ராப் பாடல் படப்பிடிப்பின் போது தல செட் உள்ள வந்து வந்து போயிட்டு இருந்தாரு. நானும் ஒரு நாலு பேர் பசங்க ஓரமா நின்னு பேசிட்டு இருந்தோம். அப்போ தல வந்தாரு அந்த பக்கம். எங்கள பாத்து, “ஏன் நின்னுட்டு இருக்கீங்க? ஒர்க் பண்ணி டயர்ட் ஆகி இருப்பீங்க உட்காருங்க” என சொல்லி தோள்ப்பட்டை மேல் கை வைத்து சொல்லிட்டு போனார். கடைசியாக என் பக்கத்தில் நின்ற ஒரு பையன், சார் பரவாயில்லை என்று சொன்னதற்கு.. தல என்ன தெரியுமா சொன்னாரு?.. “சார்னு சொல்லாதடா அண்ணானு சொல்லுடா” என சொல்லிட்டு ஸ்மைல் பண்ணிட்டு போனாரு! அம்மோவ்!” என அந்த பணியாளர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது துணிவு திரைப்படத்திலிருந்து அஜித்தின் போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதில் முகத்தில் ஆக்ரோஷத்துடன் பைக்கில் அமர்ந்தபடி இருக்கும் அஜித் முதுகில் நீளமான ஒரு துப்பாக்கியை மாட்டிக் கொண்டு கண்ணில் கண்ணாடி, மாஸ்க் என்று வெறித்தனமாக இருக்கிறார்.
ஏற்கனவே வெளியான ஒரு போஸ்டரில் அஜித் கையில் துப்பாக்கியுடன் ஸ்டைலாக சேரில் அமர்ந்தபடி போஸ் கொடுத்து இருந்தார். அதுவே பார்ப்பதற்கு படு மிரட்டலாக இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் போட்டோவிலும் அவர் துப்பாக்கி சகிதமாக இருப்பது படத்தில் எப்படிப்பட்ட ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்பதை தெளிவாக காட்டுகிறது.
அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள இந்த போட்டோ இணையதளத்தையே அதிர வைத்துள்ளது. இதன்மூலம் துணிவு படத்தின் ப்ரோமோஷனும் அட்டகாசமாக ஆரம்பித்துவிட்டது. தற்போது இந்த போட்டோவை அதிக அளவு ஷேர் செய்து வரும் ரசிகர்கள் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கின்றனர்.
சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதைத்தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான சில்லா சில்லா அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிப்ரான் இசையில் அனிருத் இப்பாடலை பாடியிருக்கிறார்.
அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கும் இந்த சில்லா சில்லா சாங் நிச்சயம் ட்ரெண்டாகும் என்று ரசிகர்கள் தற்போது கூறி வருகின்றனர். அந்த வகையில் துணிவு திரைப்படத்தின் பிரமோஷன் இப்போதே களைக்கட்ட தொடங்கியுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
தளபதி விஜய்யின் வாரிசு மற்றும் அஜீத் குமாரின் துணிவு ஆகிய படங்கள் பொங்கல் 2023 அன்று பாக்ஸ் ஆபிஸில் களமிறங்க உள்ளன. ஜனவரி 12 ஆம் தேதி வாரிசு பெரிய திரையில் வரவிருக்கும் நிலையில், துணிவின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இரண்டு பெரிய பட்ஜெட் படங்களும் தமிழகத்தில் சம அளவில் திரையிடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் அஜித் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது இதோ !!
துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என அஜித் கூறிவிட்ட நிலையில், அவரது ரசிகர்களே பயங்கரமாக ப்ரோமோட் செய்து வருகின்றனர். இந்நிலையில், துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 17ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்கு பிறகு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
எட்டு வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் படங்கள் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு, விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய இரண்டும் ஒரே நாளில், அதாவது ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.