Friday, April 26, 2024 6:32 pm

அஜித்தை பற்றி விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு ரசிகர்கள் செருப்படி பதில் வைரலாகும் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடிக்கிறார்.

அதன் பிறகு சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் ஜி.எம் சுந்தர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகை மஞ்சு வாரியார் மற்றும் நடிகர் அஜித் ஆகியோர் தங்களுடைய டப்பிங் வேலையை முடித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் நடிகர் அஜித் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என்பது காலம் காலமாகவே இருக்கும் ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகர் அஜித்தின் மேனேஜர் ஒரு நல்ல படத்திற்கு விளம்பரமே தேவையில்லை என்று பதிவிட்டார். இதை தற்போது ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். அதாவது ஒரு நல்ல படத்திற்கு விளம்பரமே தேவையில்லை என்று கூறிவிட்டு வருடத்திற்கு 365 நாளும் புகைப்படத்தை போட்டு விளம்பரம் தேடுவது சரியா என்று அஜித்தை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு விளம்பரமே தேவையில்லை என்று கூறி போட்டோ போடுவதற்கு பதிலாக ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இயக்குனர்கள். தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களும் சந்தோஷப்படுவார்களே என்றும் கூறியுள்ளார்.

இந்த விமர்சனத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் அஜித் மீது இருக்கும் பாசத்தால் வேறு சிலர் தான் புகைப்படத்தை வெளியிடுகின்றனர் என்று கூறுகிறார்கள். மேலும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தினால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் மீம்ஸ் போட்டு மோதி கொள்கிறார்கள்.

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘துணிவு ‘ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழு சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வந்தாலும், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் நடந்து வருவதாக தெரிவித்திருந்தோம். இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முன்பு தனது போர்ஷன்களுக்கு டப்பிங் பேசிய நிலையில், தற்போது பிக் பாஸ் புகழ் அமீர் தனது போர்ஷன்களுக்கு டப்பிங் பேசி வருகிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்