அஜீத் குமாரின் துணிவு திரைப்படம் பொங்கல் 2023 அன்று திரைக்கு வர உள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் ஒரு போஸ்டருடன் வெளியீட்டு தேதியை அறிவித்தார். இப்படத்தை தமிழ்நாட்டில் விநியோகிக்க படக்குழு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இப்படம் பொங்கல் அன்று தளபதி விஜய்யின் வாரிசு படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதவுள்ளது. அஜீத்துக்கும் விஜய்க்கும் இடையே ரசிகர்கள் மோதலை கண்டு பல வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், இந்த திரைப்படம் வாரிசு துணிவு ரிலீசின் காரணமாக தள்ளி போக உள்ளதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த பலரும் இது என்ன கார்ட்டூன் போல இருக்கிறது என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். ஏற்கனவே, படம் தோல்வியடையும் என்ற அச்சம் இருக்கிறது.
இந்த நிலையில், பொங்கல் ரேஸில் துணிவு வாரிசுடன் மோதுவது நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று ஆதிபொருள் பட குழு நினைப்பதாக கூறப்படுகிறது. எனவே, ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக் கொள்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
துணிவு எச் வினோத் எழுதி இயக்கிய ஒரு ஹை-ஆக்டேன் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.