Monday, April 22, 2024 11:24 pm

யப்பா.. போடுடா வெடிய அஜித்தின் அலப்பறை ஆரம்பம்​ !! துணிவு படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா..

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரின் துணிவு படத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் கைப்பற்றியிருப்பதோடு, பொங்கல் வெளியீடாக படம் இருப்பதை உறுதிசெய்துள்ள நிலையில், இரண்டு கோலிவுட் நட்சத்திரங்களின் படங்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மோத உள்ளன.

1987ல் நடந்த பஞ்சாப் வங்கிக் கொள்ளையைப் பற்றிய கதை தான் இந்தப்படத்தின் கதை. எச்.வினோத் முதலில் பத்திரிகையாளராகத் தான் இருந்துள்ளார். அதன் பின் தான் அவர் இயக்குனரானார். அதனால் அவர் ஆய்வு செய்து எழுதுவது அவருக்கு புதிதல்ல. இந்தப்படமும் அப்படிப்பட்ட ஆய்வுக்குப் பிறகு எழுதியது தான். படத்தின் கதை இதுதான்.

ஒட்டுமொத்த இந்தியாவுமே அரண்டு போன நிகழ்வு தான். பஞ்சாப் நேஷனல் வங்கியின் லூதியானா கிளையானது பஞ்சாப்பில் உள்ளது. இந்த வங்கி 2 மாடி கட்டடம் கொண்டது. பணப்புழக்கம் நிறைந்த வங்கி இதுதான்.

இந்த வங்கியைப் பற்றி ஒரு கும்பல் முழுவதுமாக நோட்டமிடுகிறது. எந்தெந்த அறைகளில் பணம் இருக்கு? எங்கெங்கு காவல் போடப்பட்டுள்ளது? எங்கெங்கு அதிகாரிகள் உள்ளனர்? அவர்கள் எந்த நேரத்தில் உள்ளே வர்றாங்க…எந்த நேரத்தில் வெளியே போறாங்க? மொத்தம் எத்தனை அறைகள் உள்ளன? என அலசி ஆராய்ந்து வருகிறது.

1987 பிப்.12ம் தேதி தான் கொள்ளை சம்பவம் அரங்கேறுகிறது. அன்று காலை வங்கி வாசலில் 2 மேட்டடார் வேனும், ஒரு பியட் காரும் வந்து நிற்கிறது. அதிலிருந்து 15 இளைஞர்கள் சரசரவென இறங்கி வங்கியினுள் செல்கின்றனர். அவர்களில் 6 பேர் மட்டும் போலீஸ் உடையில் வருகின்றனர்.

வங்கியினுள் நுழைந்ததுமே இடது புறம் பெரிய அறை ஒன்று உள்ளது. அங்கே தான் போறாங்க. முதல்லயே எது எது எங்கெங்க இருக்குன்னு கரெக்டா பிளான் பண்ணி தான் வந்துருக்காங்க. அந்த பெரிய அறையில் தான் வங்கியின் ஒட்டுமொத்த பணமும் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது.

அப்போ வங்கி ஊழியர்கள் யாருங்க…நீங்க…இப்போ போலீஸ் வராதேன்னு சந்தேகத்தோடு கேட்டுருக்காங்க. நாங்கள்லாம் பஞ்சாப் போலீஸ். பேங்க் பாதுகாப்புக்கு வந்துருக்கோம்னு சொல்றாங்க. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களும் உள்ளே வந்துக் கொண்டு இருக்காங்க.

அப்போ தான் யாருக்கும் சந்தேகம் வராதுன்னு பிளான் பண்ணி போறாங்க. அதே மாதிரி கூட்டத்தோடு கூட்டமா கலக்குறாங்க. அந்த அறைக்கும் போயிடுறாங்க. உடனே கையில இருந்த துப்பாக்கியை வெளியே எடுக்குறாங்க. அங்க இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் எல்லோரையுமே உடனடியா உட்காரச் சொல்றாங்க. இதை யாருமே அங்கிருந்தவங்க எதிர்பார்க்கல.

எல்லோரும் பயந்து நடுங்கி உட்கார ஆரம்பிக்கிறாங்க. துப்பாக்கியை பிடித்தவர் இப்போது சொல்றார். யாராவது எழுந்து ஏதாவது வேலையைக் காட்டணும்னு நினைச்சீங்கன்னா….யோசிக்கவே மாட்டேன்… நான் உடனே சுட்டுத்தள்ளிடுவேன்.

உள்ளே போனவங்க பணத்தை எல்லாம் பேக் அப் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. மொத்தம் 5 கோடியே 70 லட்ச ரூபாய். இதை சுருட்டிக்கிட்டு கும்பல் வெளியே வருது. இன்னொரு அறையில ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் போட்டு அடைச்சிட்டாங்க. இன்னொரு வேடிக்கை என்னன்னா வெளியே வந்துட்டு ஒரு அறையில இருந்து பங்கு பிரிச்சிட்டாங்க.

இது பட்டப்பகல்ல நடக்குற சம்பவம்…பங்க பிரிச்சதுக்கு அப்புறம் தான் ஒவ்வொருத்தரா பிரிஞ்சி போறாங்க. 2 மணி நேரம் இந்த கொள்ளை சம்பவம் நடந்துருக்கு.

இந்த சம்பவத்துல ஒருத்தருக்கு கூட காயம் ஏற்படல. ஒரு தோட்டாவைக் கூட காலியாக்கல. எவ்ளோ பெரிய விஷயம்…! பஞ்சாப் போலீஸ் அதுக்குப் பிறகு தான் வருது. சுற்றி சுற்றி விசாரிக்காங்க. ஆனா அவங்களுக்கு எதுவுமே பிடிபடல. ஒரு சின்ன துப்பு கூட கிடைக்கல. அரசும் பிரஷர் கொடுக்குது. போலீஸ் திணறுது.

உடனடியா சிபிஐ அதிகாரிகளுக்கு இந்த வழக்கு போகிறது. சிபிஐ அதிகாரிகளுக்கு என தனியாக சகலவசதிகளுடன் வங்கி அதிகாரிகள் அறையை ஏற்படுத்திக் கொடுத்துருக்காங்க.

வழக்கு முடியற வரை மீடியாவிடம் எதையும் சொல்லக்கூடாது என சிபிஐ நிபந்தனை விதித்தது. தொடர்ந்து வங்கி ஊழியர்களிடம் ஒவ்வொருவராக விசாரணை நடக்க ஆரம்பித்தது. முன்னாள் வங்கி ஊழியர் சம்பவத்தை சிபிஐ அதிகாரிகளிடம் நேரில் பார்த்ததை விவரிக்கிறார்.

அவரது வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு வாகனங்களைப் பிடித்தனர். இறுதியில் கொள்ளையர்கள் சிக்கினார்கள். 20 பேர்களைப் பிடித்தனர். 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. சீக்கியர் பிரிவினைவாதிகளுடன் தொடர்புடையவர்கள் 13 பேர் இருந்தனர்.

நிறைய ஆயுதங்களை வாங்க திட்டம் போட்டனர். 9 பேர் முக்கிய குற்றவாளிகள். இவர்களை தனித்தனியாக சிறைகளில் அடைத்தனர். தண்டனை கைதிகள் மேல்முறையீடு செய்கின்றனர். 9 பேரையும் சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. பல ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்ததால் விடுதலை கிடைத்தது.

துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைக்க எச்.வினோத் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் அஜீத்தின் ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்து வருகிறார். தாய்லாந்து மற்றும் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

இயக்குனர் எச்.வினோத்துக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை ஆகிய படங்கள் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தப் படமும் மாபெரும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.

கடைசியாக 2014ல் வீரம் மற்றும் ஜில்லா இணைந்து வெளியானதில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.துனிவு மஞ்சு வாரியருடன் ஒரு வங்கிக் கொள்ளையைச் சுற்றி சுழலும் போது, பெண் நாயகியாக நடிக்கிறார், வாரிசு ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

2023 பொங்கலுக்கு படம் பெரிய திரைக்கு வருவதை உறுதிப்படுத்தும் போஸ்டரை வாரிசு தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வெளியிட்டனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்