Thursday, May 2, 2024 2:15 pm

உறுதியானது வாரிசு vs துணிவு மோதல் ! வாரிசை ஒருகை பார்க்க விஜய்க்கு சவால் விட்ட அஜித் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அறிவிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வாரிசு vs துணிவு பொங்கல் வைரலாகி உள்ளது. பட ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இனி இந்த படங்களின் நிறைய அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம்.

அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாகவும் அதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயெண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

நீண்ட நாள் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் இப்படத்திற்கு துணிவு எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை குதூகலமாகக் கொண்டாடினார்கள் அஜித் ரசிகர்கள். இதையடுத்து படம் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின.

அதே சமயம் விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், வீரம்-ஜில்லா படங்களுக்குப் பிறகு அஜித்தும் விஜய்யும் மீண்டும் நேருக்கு நேர் மோதுவதை பார்க்க எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனாலும் துணிவும் படம் பொங்கலுக்கு வெளியாவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியதில் இருந்தே ஒட்டு மொத்த சினிமா வட்டாரமும் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து கொண்டிருந்தது. வாரிசு ரிலீஸ் முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறார்கள்.

அறிவிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வாரிசு vs துணிவு பொங்கல் வைரலாகி கொண்டிருக்கிறது. பட ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இனி இந்த படங்களின் நிறைய அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் தற்போது அது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும், அதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயெண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுவதாகவும் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘துணிவு’ படத்தில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் கதையானது 1987 லூதியானா வங்கிக் கொள்ளை வழக்கால் ஈர்க்கப்பட்ட வங்கிக் கொள்ளை என்று கூறப்படுகிறது.

‘துனிவு’ படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கி ஹைதராபாத், புனே, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது மற்றும் படத்தின் கிளைமாக்ஸ் அதிரடி காட்சிகள் பாங்காக்கில் படமாக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு செல்லும் என தெரிகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்