Thursday, May 2, 2024 6:11 am

அடேங்கப்பா இப்படி ட்விட்ஸ்டா பிக் பாஸில் மொத்தம் இத்தனை போட்டியாளர்களா? லேட்டஸ்ட் அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 வருகிற அக்டோபர் 9ஆம் தேதி முதல் பிரமாண்டமாக துவங்கவிருக்கிறது.கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் குறித்து பல தகவல் வெளியாகி வருகிறது.இதனால் இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பானது அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் பிக்பாஸில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் குறித்த வெளியாகிய உத்தியோகபூர்வ அறிவிப்பு இதோ

சுயாதீன இசைக்கலைஞரான அசல் கொலாரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். இவர் யூடியூபில் வைரல் ஹிட் அடித்த ஜோர்தால என்கிற பாடலை பாடியவர் ஆவார். இதுதவிர ஏராளமான சுயாதீன இசைப் பாடல்களையும் இவர் பாடி உள்ளார்.

ராப் பாடகரான ஏடிகே-வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான கடல் படத்தில் இடம்பெறும் மகுடி என்கிற பாடலையும், அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெறும் சோக்காலி என்கிற பாடலையும் பாடியவர்

1990-களில் ரஜினி, சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் விசித்ரா. கடந்த சில ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வந்த இவர், தற்போது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார்.

சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர் ராபர்ட் மாஸ்டர். விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ள இவர், நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிக்பாஸில் கலந்து கொள்ளவுள்ளார்.

சீரியல் நடிகையான ஸ்ரீநிதி, விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி என்கிற சீரியல் மூலம் தனது பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானர் இவரும் பிக்பாஸில் கலந்து கொள்ளவுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, மேற்றும் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபல்யமான அமுதவானனும்பிக்பாஸில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா. இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் நடிகர் ரியோவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.தொடர்ந்து பல சீரியலில் நடித்த இவரும் பிக்பாஸில் கலந்து கொள்ளவுள்ளார்.

மாடல் அழகியான ஆயிஷா ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனது சத்யா சீரியல் மூலம் தான். அதில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் .

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனாவாக நடித்து பிரபலமான நந்தினியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். சமீப காலமாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாகவும் கலக்கி வருகின்றார்.

சினிமாவில் டான்சராக இருந்து வந்தவர் சாந்தி. இவர் மெட்டி ஒலி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள இவர், தற்போது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளார்.

சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்து வந்தவர் விஜே கதிரவன். அதன்பின்னர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகின்றார். இவரும் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ளவுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் உடன்பிறந்த சகோதரர் நடிகர் மணிகண்டன் கலந்து கொள்ளவுள்ளார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திர நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்

பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான விஜே மகேஸ்வரியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். சமுத்திரகனிக்கு ஜோடியாக ரைட்டர் படத்தில் நடித்திருந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் ரிலீசான கமலின் விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன பாடகி ராஜேஸ்வரியும் பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுக்க உள்ளார். இவர் தற்போது சினிமாவில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி வருகிறார் என்பதும் முக்கியமாகும்.

டிக்டாக் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் ஜிபி முத்து. யூடியூப் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். சினிமாவிலும் ஒருசில படங்களில் நடித்து வரும் இவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாடல் அழகி ஒருவர் கலந்துகொள்வது வழக்கம். இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களிலும் அவ்வாறே இருந்த நிலையில், இந்த சீசனிலும் ஷெரினா என்கிற மாடல் அழகி ஒருவர் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஜனனி என்கிற தொகுப்பாளினி பிக்பாஸ் 6-ல் பங்கேற்க உள்ளார். இதற்குமுன் அங்கிருந்து வந்து கலந்துகொண்ட லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டு மிகவும் பேமஸ் ஆனார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை நமீதா மாரிமுத்து கலந்துகொண்ட நிலையில், இம்முறை ஷிவின் கணேசன் என்கிற திருநங்கை ஒருவர் போட்டியாளராக எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்