Tuesday, April 30, 2024 2:31 am

துணிவு படத்தின் ரீலிஸ் தேதியை லாக் செய்த அஜித் !! தீயாய் வேலை பார்க்கும் வினோத் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எச்.வினோத் இயக்கும் ‘துணிவு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித்குமார் முன்னதாக பாங்காக் புறப்பட்டுச் சென்றார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் பேங்க் ஹீஸ்ட் த்ரில்லராக இருக்கும். இந்த ஷெட்யூலில் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளை படக்குழுவினர் எடுக்கவுள்ளனர்.

நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் டைட்டில் மற்றும் இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு தொடர்ந்து அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரித்த நிலையில் 164 நாட்கள் காத்திருப்பிற்கு பிறகேடைட்டில் வெளியாகியுள்ளது.இந்தப் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் ஜான் விஜய், சிபி சந்தன் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில் ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தி முடித்துள்ளது. முன்னதாக பூனாவிலும் சூட்டிங் திட்டமிடப்பட்டு கேன்சலானது.

முன்னதாக நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் ஹெச் வினோத், போனிகபூர் கூட்டணியில் இணைந்திருந்த நடிகர் அஜித், தற்போது மூன்றாவது முறையாக துணிவு படத்திலும் கூட்டணி அமைத்துள்ளார். இந்தத் தலைப்பு ரசிகர்களை அதிகமாக கவரவில்லை என்றாலும், அஜித் எந்த தலைப்பில் நடித்தாலும் கெத்து தான் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தப் படம் வட மாநிலத்தில் நடைபெற்ற பிரபல பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி பெரிய வங்கிக் கொள்ளையை சாத்தியப்படுத்திய பிரபல கொள்ளையை இந்தப் படத்தில் கதைக்களமாக ஹெச் வினோத் எடுத்துள்ளார்.

இதற்காக ஐதராபாத்தில் மவுண்ட்ரோடு மற்றும் பேங்க் உள்ளிட்டவற்றின் பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு நீண்ட நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்டன. இதனிடையே நிதி நெருக்கடி காரணமாக இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப்போனதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தற்போது பாங்காக்கில் துணிவு படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சூட்டிங்கில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் விஜய், சிபி சந்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தீபாவளிக்கு முன்னதாக இந்த சூட்டிங்கை முடித்துக்கொண்டு சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 2 போஸ்டர்கள் வெளியான நிலையில், படத்தின் மூன்றாவது போஸ்டர் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் செட்டராக மாறியது. மஞ்சு வாரியர் கதாநாயகியாக சமுத்திரக்கனி, வீரா, அஜய், ஜான் கொக்கன், மகாநதி சங்கர், சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்போது, படத்தின் வர்த்தக நிலையைப் பற்றிய சில பரபரப்பான தகவல்களை உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். டிஜிட்டல் உரிமைகள், சாட்டிலைட் உரிமைகள் மற்றும் திரையரங்கு விநியோக உரிமைகளை முறையே நெட்ஃபிக்ஸ், கலைஞர் டிவி மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளன. இப்படத்தின் உரிமையை மார்க்கெட் தலைவர்கள் சாதனை விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துனிவு 2023 ஜனவரியில் ஒரு திருவிழா நாளில் பெரிய திரைகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்