Sunday, April 28, 2024 11:25 am

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் இந்த படத்தின் உல்ட்டாவா !! ரசிகர்கள் அதிர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘வெந்து தணிந்தது காடு’ தெலுங்குப் பதிப்போடு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் புதிய தெலுங்கு வெளியீடுகள் காரணமாக டப்பிங் பதிப்பு இரண்டு நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 17 அன்று வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. சிலம்பரசன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’, படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நடிகர் சிம்பு நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு திரைப்படம். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது.

மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், அந்த படத்துக்கு அடுத்தபடியாக வெளியாகும் படம் என்பதால் சிம்புவுக்காக ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுத்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நடிப்பில் பூர்த்தி செய்திருக்கிறார் சிம்பு.

படத்திற்காக 10 கிலோவுக்கும் மேல் எடை குறைத்து, கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக இளம் நாயகி சித்தி இத்னானி நடித்துள்ளார். படத்திற்கான விமர்சனங்கள் கலவையாகவே வந்திருக்கின்றன. மும்பை கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டிருப்பதால், அந்தளவுக்கு இல்லை என ஒரு சிலர் கூற, படம் நன்றாக இருக்கிறது எனவும் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்திற்கு இன்னொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. படத்தின் கதை விஜய் படத்தின் கதை என நெட்டிசன்கள் கிளப்பிவிட்டுள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சினிலே படம் பெரிய ஹிட் அடித்தது. அந்தப் படத்தில் குடும்பத்துக்காக மும்பை செல்லும் விஜய், அங்கு அடியாளாக சேர்கிறார். பின்னர், காதலில் விழுந்து அந்த அடிதடியில் இருந்து வெளியேற நினைக்கிறார். அதற்காக அவர் எடுத்த முயற்சிகளை கை கொடுத்ததா? காதலியை தமிழகத்துக்கு அழைத்து வந்தாரா? என்பதே அப்படத்தின் சுவாரஸ்யமான கதை.

இப்போது வெந்து தணிந்தது காடு படமும் இதே கதையை ஒத்ததாக இருப்பதாக சிலர் விமர்சித்துள்ளனர். காபி அடித்து எடுத்த படத்தை ஏன் கொண்டாடுகிறீர்கள் என சிலர் கேட்க, சிம்பு ரசிகர்கள் கொதித்தெழுந்து அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

2021-ம் ஆண்டு வெளியான மாநாடு வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிக்கும் முதல் படம் ‘வெந்து விழுந்தது காடு’. இந்நிலையில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரன் இந்தப் படம் வெளியானது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் நேற்று ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில், மற்றும் நடிகர் உணர்ச்சிவசப்பட்டார். ராஜேந்திரன் தனது ரசிகர்களிடம் பேசுகையில், சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைப் பார்த்திருப்பதால், இந்த மூன்று நட்சத்திரங்களிலிருந்தும் ரசிகர்கள் பெரிதாக ஏதாவது விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்