Thursday, March 30, 2023

பட்டும் திருந்தாத அஸ்வின் !! பிரபல இயக்குனரை தாக்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்வின் !! நீங்களே பாருங்க

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோ மூலம் புகழ் பெற்ற அஸ்வின் குமார், தனது இரண்டாவது படத்தில் நாயகனாக பிரபு சாலமன் இயக்கத்தில் பணியாற்ற உள்ளார். ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் மூத்த நகைச்சுவை நடிகை கோவை சரளா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் அக்டோபரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, பட வாய்ப்புகளை பெற்றவர் அஸ்வின் குமார். இவர் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. எதிர்பார்ப்புக்குறிய இப்படம் படுதோல்வியடைந்தது.

அதற்க்கு காரணமே நடிகர் அஸ்வினின் பேச்சு தான். ஆம், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நான் 40 இயக்குனர்களிடம் 40 கதை கேட்டேன். அந்த அணைத்து கதைகளையும் கேட்கும் போது தூக்கம் வந்துவிட்டது என்று பேசியிருந்தார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவே இப்படத்தின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த வெப் சீரிஸ் ‘தமிழ் ராக்கர்ஸ்’. இந்த வெப் சீரிஸில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில், தனது மகனுக்கு சினிமா வாய்ப்பு கேட்டு போட்டோ ஒன்றை கொடுப்பார் அப்போது இடம்பெறும் வசனம் ‘சார் இவன் பெயர் அஸ்வின் குமார், அவனே அவன AK-னு சொல்லிபான். போட்டோல பார்த்தா தூங்குன மாதிரிதான் இருப்பான். ஆனா நேர்ல நல்லா இருப்பான்’ என்று ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்த காட்சி அஸ்வின் குமாரை தான் குறிக்கிறது என்று ட்ரோல் செய்து வருகிறார்கள். இதற்க்கு பதிலளிக்கும் விதமாக அஸ்வின் தனது இன்ஸ்டாகிராமில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸின் இயக்குனர் அறிவழகனை மறைமுகமாக தாக்கி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதில் ‘தாங்கள் பிரைன் பியூட்டி (அறிவழகன்) கிடையாது, பிரைன் லெஸ் பியூட்டி (அறிவில்லாதவன்) என்று நிரூபித்துள்ளீர்கள். சார் ரிவியூஸ் பாத்திருப்பாருன்னு நம்புறேன். புரிஞ்சவன் பிஸ்தா’ என்று பதிவு செய்துள்ளார்.

இதை கவனித்த ரசிகர்கள் அஸ்வின் குமார் மறைமுமாக இயக்குனர் அறிவழகனை தான் தாக்கியுள்ளார் என்று கூறி வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக சென்று கொண்டிருக்கிறது.

இயக்குனர் பிரபு சாலமனின் கடைசி படம் மும்மொழி காதல் (ஆரண்யா, ஹாத்தி மேரே சாத்தி). கும்கி 2 படத்தின் படப்பிடிப்பையும் அவர் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்