Saturday, April 27, 2024 4:17 am

சுமார் 7 வருடம் கழித்து தளபதி விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அஜித் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொங்கல் தினத்தன்று பாக்ஸ் ஆபிஸில் அஜித்குமாரின் ‘ஏகே61’ படமும் தளபதி விஜய்யின் ‘வாரிசு ‘ படமும் மோதலாம். இதற்கிடையில், அஜித்குமார் இந்த மாத தொடக்கத்தில் ‘AK61’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். இப்படம் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்த பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் சென்னை மற்றும் ஆந்திராவில் முக்கிய அட்டவணைகளை முடித்துள்ளனர். தற்போது ஆந்திராவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். சமீபத்திய செய்தி என்னவென்றால், அல்டிமேட் ஸ்டாருடன் சில உயர்-ஆக்டேன் அதிரடி காட்சிகளை படமாக்க குழு 21 நாள் நீண்ட அட்டவணையை பாங்காக்கில் திட்டமிடுகிறது. இந்தப் படத்தில் ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பிறகு ஏகே ஒரு நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் இரு துருவாரங்களாக இருக்கும் அஜித் விஜய் திரைப்படங்கள் எப்போது ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவருடன் காத்திருந்த காலம் எல்லாம் உண்டு. அப்படி சில சமயம் நடந்தும் உள்ளது. அதேபோல் வரும் பொங்கல் தினம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஒரு சிறிய பிளாஷ்பேக் நிகழ்வை நாம் இப்போது பார்க்கலாம். அதாவது 2007 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு. அஜித் நடித்திருந்த ஆழ்வார் திரைப்படம் விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது.

இதன் ரிசல்ட்டை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அஜித்தின் ஆழ்வார் திரைப்படம் படுதோல்வி. அந்த பக்கம் தளபதி விஜயின் போக்கிரி இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு கொடுத்து இருந்தது.

அதற்கு அடுத்ததாக 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வீரம் திரைப்படம் விஜய் நடிப்பில் ஜில்லா திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதில் முதலில் ஜில்லா படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. குறைவான திரையரங்குகளில் வீரம் திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

அப்படி இருந்தும் நாட்கள் மெல்ல மெல்ல நகர நகர வீரம் திரைப்படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன. அதன் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டன. அதே போல் வசூலிலும் வீரம் திரைப்படம் ஜில்லா திரைப்படத்தை முந்தியது என்று பலரும் கூறுகிறார்கள். ஜில்லா திரைப்படமும் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது.

அப்படி இருந்து சமயத்தில் தான் விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் விநியோகிஸ்தர்களை அழைத்து ஜில்லா படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அதில் விஜய் படக்குழுவினர் மற்றும் விநியோக செயல்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அஜீத் குமாருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும், வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், அஜய் மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, ‘ஏகே61’ படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு ‘வல்லமை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்