Sunday, April 28, 2024 10:20 pm

சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி – ரவீந்திரன் இருவரும் ஹனிமூனுக்காக நாடு விட்டு நாடு சென்ற தம்பதியினர் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வாணி ராணி, ஆபீஸ், செல்லமாய், உதிரிப்பூக்கள், ஒரு கை ஓசை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை வி.ஜே.மகாலட்சுமி, காதல் என்னனு தெரியுமா, முருங்கைக்காய் போன்ற படங்களைத் தயாரித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை மணந்தார். அவரது லிப்ரா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ஒரு சிலருடன் சிப்ஸ்.

ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டனர் என்பதும், இது அவர்களின் இரண்டாவது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் மறுப்பக்கம் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம், குக் வித் கோமாளி புகழ் திருமணம், மற்றும் VJ மகாலட்சுமி – ரவீந்திரன் திருமணம் போன்ற நட்சத்திர திருமணங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் வாழ்த்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் நட்சதிர தம்பதியினர் அனைவரும் தங்கள் திருமணம் சுமார் ஒரு வாரத்துக்காவது பரபரப்பாக பேச வேண்டும் என்கிற நோக்கில் பிரமாண்டமாக திருமணம் செய்து வருகின்றனர்.

திருமணத்துக்கு போன்று தங்கள் ஹனிமூன் அதை விட பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் முடிந்து ஹனிமூனுக்காக தாய்லாந்தில் உள்ள ஒரு தனி தீவிற்கு சென்று, அங்கே தங்களுடைய தேனிலவை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தனர்.

பெரும்பாலும் நட்சத்திர தம்பதியினர் தங்களுடைய பிரைவேசி கருத்தில் கொண்டு ஹனிமூன் தனி தீவுகளை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் பெரும் கோடீஸ்வரரான தயாரிப்பாளர் ரவீந்திரன் தற்பொழுது சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி யை திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணம் எளிமையாக திருப்பதியில், குடும்பத்தினர் மற்றும் முக்கிய நபர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

< மேலும் இந்த திருமணம் எந்த ஒரு முன் அறிவிப்பு மற்றும் விளம்பரம் இல்லாமல் தீடிரென நடைபெற்றது. இந்நிலையில் தங்கள் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது, ஆனால் ஹனிமூன் மிக பிரமாண்டமாக மனைவி மஹாலஷ்மி இதுவரை அவர் வாழ்க்கையில் பார்த்திடாத ஒரு இடத்திற்கு அழைத்து சென்று கொண்டாட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கோடீஸ்வரர் குடும்பத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்திரன்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று அங்கே உள்ள ஒரு தனி தீவில் மிகப் பிரம்மாண்டமாக புதுமண தம்பதியினர் மஹாலக்ஷ்மி – ரவீந்திரன் தம்பதியினர் தங்களுடைய ஹனிமூனை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி. மேலும் மனைவியுடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் போன்று தொடர்ந்து வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

img src=”https://assets.newstig.net/wp-content/uploads/2022/09/02100825/Producer-Ravindar-and-VJ-Mahalakshmi-Wedding-Photos-5.jpeg” alt=”” width=”1200″ height=”675″ class=”alignnone size-full wp-image-12580″ />

ரவீந்தர் தயாரிப்பில் விதார்த், விக்ராந்த் நடிக்கும் ‘விடியும் வரை காற்று’ படத்திலும் மகாலட்சுமி நடிக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்