Saturday, April 27, 2024 6:08 am

அடப்பாவமே சிவகார்த்திகேயன் படத்துக்கு வந்த சோதனை!! தமன் இசையை அட்டர் காப்பி அடித்த அனிரூத் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் பாடலான பிம்பிலிக்கி பிலாபி வெளியாகியுள்ளது. தமன் எஸ் இசையமைத்துள்ள இந்த பாடலை விவேக் எழுத, அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார்.

தெலுங்கில் ஜாதி ரத்னாலு படத்தின் மூலம் அறிமுகமான அனுதீப் கே.வி இயக்கியுள்ள பிரின்ஸ் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியவற்றின் கீழ் சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் இதைத் தயாரித்துள்ளனர்.

தொலைக்காட்சி நட்சத்திரமாக இருந்து தன்னுடைய உழைப்பால் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து தற்போது டான், டாக்டர் என 100 கோடி வசூல் படங்களில் நடித்து கவர்ந்து வருகிறார்.

தற்போது மாவீரன், பிரின்ஸ் என்ற இரு படங்கள் உட்பட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் அனுதீப் கேவி இயத்தில் பிரின்ஸ் படம் விரைவில் தியேட்டரில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் இப்படத்தில் முதல் பாடலான பிம்பிலிக்கி பிளாப்பி என்ற பாடல் வெளியாகியது.

சிவகார்த்திகேயன் – அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான பல பாடல்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதேபோல் இந்த பாடலும் வெளியான ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் குறையை கண்டுபிடித்து சிலர் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இப்பாடலின் இசை நடிகர் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமன் இசையில் வெளியான சர்கார் வாரிபாட்ட படத்தின் மா மா மகேஷா பாடலில் அமைந்ததை போல் இருக்கிறது. தமனை அப்படியே அனிருத் காப்பி அடித்துவிட்டாரே என்று நெட்டின்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் இங்கிலாந்தின் லண்டனுக்கு எதிராக உருவாகும் இப்படத்தின் கதாநாயகியாக மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். எஸ் தமன் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், அருண் விஸ்வா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்