Thursday, April 18, 2024 7:17 am

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் பிக்பாஸ் சீசன் 6 கோலாகலமாக விரைவில் தொடங்கப்படும். இது ஒரு பிரமாண்ட நிகழ்வுடன் ஒளிபரப்பப்படும், மேலும் சில பிரபலங்கள் ஸ்டார் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவின் நிகழ்ச்சியின் மூலம் அதற்கு வண்ணம் சேர்த்தனர். சென்னையின் புறநகரில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் உள்ள பிக் பாஸ் தமிழ் 6 இன் வீடு மற்றும் செட் அனைத்தும் பிரமாண்டமான பிரீமியர் காட்சிக்கு தயாராக உள்ளன.

பிக்பாஸ் சீசன் 6 அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கவேண்டும். போட்டியாளர்கள் அவர்களை கவர வேண்டும் என பார்த்து பார்த்து பிக்பாஸ் ஆட்களை திரட்டுகிறதாம். அந்த வகையில், 11 பேர் யார் என ஒரு லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.

ஷில்பா மஞ்சுநாத்
ஷில்பா மஞ்சுநாத் நடிகை மற்றும் மாடலிங் துறையை சேர்ந்தவர். இவர், விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படத்தில் அறிமுகமானவர்.

நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார்.

மோனிகா டி, இமான் முன்னாள் மனைவி
இசையமைப்பாளர் டி.இமானின் முன்னாள் மனைவியான மோனிகா. இமான் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்திருந்தார்.

இப்போது இரண்டாம் திருமணம் செய்த டி.இமானை விமர்சித்து வருகிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பரபரப்பு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

தர்ஷா குப்தா
விஜய் டிவியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் தர்ஷா குப்தா.

தற்போது செந்தூர பூவே சீரியல்களிலும், படம் வேலைகளாலும் பிஸியாக இருக்கிறார். இவரும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடகி ராஜலட்சுமி
நாட்டுப்புற பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் ராஜ லட்சுமி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சினிமாவிலும் பாட வாய்ப்பு கிடைத்தது. இவரும் கலந்துகொள்வாராம்.

கார்த்தி குமார்( பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர்)
தமிழ் சினிமாவில், கார்த்திக் குமார் கண்ட நாள் முதல், அலைபாயுதே, யாரடி நீ மோகினி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும் ஆவார்.

செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்
பாலிமர் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இப்போது அந்த சேனலில் இருந்து விலகி விட்டார்.

வித்தியாசமான செய்தி களத்திற்கும், வாசிப்பிற்கும் பிரபலமானவர் இவர் பிக்பாஸ் களமிறக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீநிதி
நடிகர் சிம்புவை காதலிப்பதாக சர்ச்சையை கிளப்பிய சீரியல் நடிகையான ஸ்ரீநிதி, ஜீ தமிழ் சீரியலில் நடித்து பிரபலமானவர்.

இவர் சமீப காலங்களில் பெர்சனலாக பிரச்சனையால் பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு உள்ளவர்.

சீரியல் புகழ் ஆயிஷா
சீரியல் நடிகையான ஆயிஷா முதலில் விஜய் டிவியில் சீரியலில் அறிமுகமானார். அதன் பின்னர் சில பிரச்சனைகளால் அந்த சேனலில் இருந்து விலகி ஜீ தமிழின் சத்யா சீரியலில் நடித்தார்.

GP முத்து
டிக் டாக் மூலம் மக்களிடையே பிரபலமானவர் GP முத்து. இப்போது இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

இவர் கடந்த சீசனிலேயே பங்கேற்பார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் பங்கேற்பார் எனக்கூறப்படுகிறது.

தொகுப்பாளர் ரக்சன்
தொகுப்பாளர் ரியோ ராஜ் வரிசையில் களமிறங்கும் அடுத்த விஜய் டிவி பிரபலம் ரக்சன்.

ரக்சன் கலக்க போவது யாரு, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் ஒரு நடிகருக் கூட.

டிடி
பல சீசன்களாக இவர் வருவார் என எதிர்பார்த்த ஒரே தொகுப்பாளினி என்றால் அது டிடி தான். இவர், விஜய் டிவியின் முக்கியமான ஒரு அங்கம் என்றே சொல்லலாம்.

உடல் நல பாதிப்பால் இப்போது இவர் அவ்வளவாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.

கமல் சம்பளம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு எபிசோடுக்கு கமல் 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்க உள்ளார்.

இதை வைத்து பார்க்கும்போது இந்த பிக் பாஸ் சீசன் 6-க்கு மட்டும் கிட்டத்தட்ட 70 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

சீசன் 1, 2, 3 மற்றும் 4 வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், 5வது சீசனுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், கமல் தனது அரசியல் பணிகளில் பிஸியாக இருப்பதால், இந்த நிகழ்ச்சியை மீண்டும் செய்யமாட்டார் என்ற ஊகங்கள் எழுந்தன, ஆனால் இறுதியாக கமல் களத்தில் வந்தார். முதல் சீசன் அபரிமிதமான வரவேற்பைப் பெற்றாலும், இரண்டாவது சீசன் பல சர்ச்சைகள் இருந்ததால் ரேட்டிங்கில் சரிவு ஏற்பட்டது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்