Wednesday, May 31, 2023 2:36 am

AK61 படம் ‘அதுக்கும் மேல​’ அஜித் எடுத்த அதிரடி முடிவு.? அடுத்த சம்பவம் ஆன் தி வே !!!

spot_img

தொடர்புடைய கதைகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தோழில் படத்தின் ட்ரெய்லர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படமான பொர்...

சிஎஸ்கே வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சந்தோஷ் நாராயணன் ! வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் சமீபகாலமாக டோலிவுட்டில்...

விஜய் உடன் மோதும் தனுஷ் ! லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் தனுஷ் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற...

யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி !

யோகி பாபு பிரபலமான நடிகரும் நகைச்சுவை நடிகருமான இவர் பல சுவாரஸ்யமான...
- Advertisement -

‘ஏகே 61’ படத்திற்காக இயக்குனர் எச் வினோத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ளார். ஹீஸ்ட் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு படிப்படியாக நடந்து வருகிறது.

அஜித் நடிப்பில் தற்போது அவரது 61வது திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை வினோத் இயக்கி வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க வினோத் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஆதலால் இப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த திரைப்படம் முதலில் தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால், இப்பட ஷூட்டிங் இன்னும் முடியாமல் இருப்பதால், இப்பட ரிலீஸ் தீபாவளியாக இருக்காது டிசம்பர் மாதமாக இருக்கும் என கூறப்பட்டது.

ஆனால், தற்போது வெளியான தகவல் என்னவென்றால், இந்த திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளதாம். மேலும் பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாம்.

இதில் என்ன ஷாக்கிங் செய்தி என்றால், அதே பொங்கல் தினத்தில் தான் தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இருவது படங்களும் ஒருவேளை ஒன்றாக களமிறங்கினால், பாதிக்கப்படப்போவது தியேட்டர் அதிபர்கள்தான்.

இரண்டு திரைப்படமும் தனித்தனியாக ரிலீஸ் ஆனால் தான், தியேட்டர் அதிபர்களுக்கு லாபம். ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிவிட்டால் அது தியேட்டர் அதிபர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக மாறிவிடும். மேலும், தியேட்டரில் ஏதேனும் வேண்டாத சம்பவம் நடந்துவிடும் என்பதாலும் இந்த மோதல் வேண்டாம் என பலர் கருத்து கூறி வருகின்றனர்.

அஜித் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யுடன் ஒன்பது முறை மோதினார், ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முன்னாள் கையை உயர்த்தினார். இருப்பினும், ‘ஏகே 61’ பட வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம், மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியீட்டு தேதியுடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்