Saturday, April 27, 2024 3:10 am

இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த பாக்ஸ் ஆஃபீஸ் டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆண்டாகவே கருதப்படுகிறது, அதற்கு முக்கிய காரணமே நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானது தான்.

அந்த வகையில் வருடத்தின் ஆரம்பத்திலே அஜித்தின் வலிமை ,கமலின் விக்ரம் விஜயின் பீஸ்ட் என முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து பல சிறந்த விமர்சனங்களை பெற்ற திரைப்படங்களும் திரையரங்கில் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்றது.

இதனிடையே தற்போது தமிழ்நாடு Box Office-ல் அதிக வசூல் புரிந்து டாப் 10 இடத்தை பிடித்த திரைப்படங்களின் லிஸ்ட்டை தான் தற்போது பார்க்கவுள்ளோம்.

விக்ரம் :

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். பெரிய எதிர்பார்ப்புடன் கோலிவுட் திரைவுலகமே கொண்டாடும் திரைப்படமாக மாறியுள்ளது விக்ரம். பல ஆண்டுகள் கழித்து கமல் திரைப்படம் வெளியானாலும் இதுவரை வெளியான திரைப்படங்களின் அனைத்து வசூலையும் முறிடித்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

அந்த வகையில் விக்ரம் திரைப்படம் ரூ. 260 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்தாண்டு அதிக வசூல் செய்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இன்னும் திரையரங்களில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கும் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வலிமை

அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை, பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளிவந்த வலிமை கலவையான விமர்சணங்களை அதிகமாக பெற்றது. மேலும் இப்படம் உலகமுழுவதும் மொத்தமாக ரூ, 220+ கோடிகள் வசூல் செய்துள்ளது.

டான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் டான். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெளியான டான் சிவகார்த்திகேயனின் இரண்டாவது 100 கோடி வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது. அதன்படி இப்படம் உலகளவில் ரூ.125 கோடிளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பீஸ்ட்


எப்போதும் போல இந்தாண்டும் விஜய்யின் திரைப்படம் தான் பாக்ஸ் ஆபிஸில் டாப்பாக வந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது பீஸ்ட். அதிகமாக இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலையே பெற்றுள்ளது. அதன்படி விஜய்யின் பீஸ்ட் உலகளவில் மொத்தமாக ரூ. 195 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

எதற்கும் துணிந்தவன்

சூர்யா நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். குடும்ப திரைப்படமாக திரைப்படமாக உருவாகியிருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் ரூ,80 கோடியளவில் வசூல் செய்துள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதி, நயந்தாரா, சமந்தா என முதல்முறையாக முன்று முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 66 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

FIR

விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் FIR. தில்லர் திரைப்படமாக வெளியான FIR மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 24 கோடியை வசூல் செய்திருக்கிறது.

வீரமே வாகை சூடும்


விஷால் நடிப்பில் இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியானது வீரமே வாகை சூடும். பக்கா ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று ரூ. 23 கோடி வசூல் செய்திருக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்