Saturday, April 27, 2024 5:29 am

உடல் நல குறைவால் மூத்த இயக்குனர் உயிரிழப்பு!! அதிர்ச்சியில் திரையுலகம்!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

1967-ம் ஆண்டு சஞ்சீவ் குமார் நடித்த ‘நௌனிஹால்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக சாவன் குமார் தக் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.

இப்படம் தேசிய வருதுக்கு பரிந்துரைக்கபட்டது. அதனைத் தொடர்ந்து, 1972-ம் ஆண்டு மீனா குமாரியின் கடைசிப் படமான ‘கோமதி கே கினாரே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இதையடுத்து, சௌதென், சனம் பெவாஃபா, ஹவாஸ், கோம்தி கே கினாரே, சாஜன் பினா சுஹாகன் போன்ற படங்களை சவான் குமார் தக் இயக்கி உள்ளார். மேலும் தான் இயக்கிய படங்களில் மிகவும் பிரபலமான சில பாடல்களை எழுதியுள்ளார்.86 வயதான சவான் குமார் தக் ஏற்கனவே நுரையீரல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, இயக்குநர் நுரையீரல் கோளாறு காரணமாக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவரின் உடல்நிலை மோசமானதால் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயம் சீராக செயல்படவில்லை என்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

இதய செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு பாலிவுட் நடிகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இயக்குநர் சவான் குமார் தக் மறைவுக்கு நடிகர் சல்மான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என் அன்பான சவான் ஜி, நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள். நான் எப்போதும் உங்களை நேசிக்கிறேன், மதிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்