Friday, April 26, 2024 8:52 am

நாற்காலியில் அமர்ந்தவாறே அசையாத விஜயகாந்த்!! தொண்டர்கள் அதிர்ச்சி!! வீடியோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், கம்பீரமாக கையை அசைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இவரது பிறந்தநாளுக்கு பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இவரைப் பற்றின வதந்திகள் அதிகமாகவே வெளிவந்து கொண்டிருந்தது.

தனது பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தனது மனைவி மகன்களுடன் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார்

வெள்ளை சட்டை பேண்ட் கறுப்பு கண்ணாடி அணிந்து நாற்காலியில் அமர்ந்தவாறு தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். கம்பீரமாக கையை அசைத்த அவர் திடீரென அவ்வப்போது சோர்வாவதுடன், இருக்கையில் இருந்து சரியவும் செய்தார்.

தனது கண்ணாடியை கழற்ற முயன்றார் அதற்குள் அவரது மகன் அதனை போட்டுவிட்டு பின்பு அவரது கையை எடுத்துவிட்டார். அந்த கையை தொண்டவர் ஒருவர் அருகில் இருந்து தாங்கி தனது கையை வைத்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது.

மேலும் தொண்டர்கள் அருகில் இருந்து கூறும் விடயத்தினை விஜயகாந்த் செய்வதையும் பார்க்க முடிகின்றது. கம்பீருமாக இருந்தவர் இன்று இவ்வாறு பொம்மை போன்று சொன்னதை செய்வதைக் கண்டு தொண்டர்கள் கண்கலங்கவும் செய்கின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்