Tuesday, April 23, 2024 7:30 am

கூல் சுரேஷுக்கு தக்க பாடம் புகட்டிய இயக்குனர் ஷங்கர் !! நடந்தது என்ன ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் கூல் சுரேஷ் சுய விளைபரத்திற்காக, எதையாவது பேசி எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகின்றவர். சமீபத்தில் வெளியான விருமன் படம் குறித்து பேட்டியளித்த கூல் சுரேஷ், அந்த படத்தில் நடித்த அதிதி சங்கரை காதலிப்பதாக தெரிவித்தவர், மேலும் அவர் பேசியதாவது, இயக்குனர் சங்கர் சார் நீங்கள் படத்தில் மட்டும் தான் உங்களுடைய காதலை வாழ வைப்பீர்களா என்றும்,

என்னுடைய காதலை நீங்கள் வாழ வைக்க மாட்டீர்கள் என்று என்னுடைய காதலி அதிதி முன்பு நீங்கள் ஏதாவது சொல்லி இருந்த தகவல் எனக்கு வந்து இருந்தால், நேரடியாக நான் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று என்னுடைய காதலை வாழ வைக்க கமிஷனரிடம் மனு கொடுக்க உள்ளேன். அங்கே சென்றும் எனக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், முதல்வர் வீட்டின் முன்பு என்னுடைய காதலி அதிதி சங்கருடன் உண்ணாவிரதம் இருக்க இருக்கின்றேன்.

அதனால் என்னுடைய காதலை சங்கர் சார் நீங்க தான் வாழ வைக்க வேண்டும். உங்களுடைய பெண்ணை என் வீட்டுக்கு வர வையுங்கள், நான் கயிற்றில் கட்டில் உட்கார வைத்து, கால் அமுக்கி விட்டு, கண் கலங்காமல் பார்த்துக் கொள்வேன். இயக்குனர் சங்கர் சார், உங்கள் வீட்டிற்கு நான் மருமகனாக வருவதற்கு தகுதி இருக்கா என்பது எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் என்னை நீங்கள் மருமகனாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதிதி ஐ லவ் யூ என பொது வெளியில் கூல் சுரேஷ் பேசியிருந்தார்.

கூல் சுரேஷின் இந்த பேட்டி இயக்குனர் சங்கர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய தலை குனிவை ஏற்படுத்தியது. ஏற்கனவே மகள் சினிமாவில் நடிப்பது சங்கருக்கு விருப்பமில்லை. இருந்தும் மகளின் பிடிவாதம் காரணமாக கவர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதவாறு படத்தில் படங்களை தேர்வு செய்து நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் சங்கர்.

ஆனால் கூல் சுரேஷ் பொதுவெளியில் அதிதி சங்கரை லவ் பண்ணுகிறேன் என்று மீடியா மூலம் முத்தம் கொடுப்பதும், சங்கரை மாமனார் என்று அழைத்ததும், சங்கர் உறவினர்கள் மத்தியில் மிகப்பெரிய தலைகுனிவை அவர் குடும்பத்திற்கும் அவருக்கு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சினிமா துறையை தனக்கு நெருங்கிய முக்கிய நபரை அழைப்பு தனது வருத்தத்தை சங்கர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சங்கரின் நெருக்கமான அந்த நபர் உடனே கூல் சுரேஷை தொடர்பு கொண்டு, செம டோஸ் கொடுத்துகிறார், இதெல்லாம் வேறு எங்கையாவது வச்சுக்க, உனக்கு விளம்பரத்துக்கு அவர் பொண்ணு தான் கிடைச்சாங்களா, தொலைச்சுப்புடுவோம் ராஸ்கல், சினிமால நீ இண்டஸ்ட்ரி பக்கமே நீ வரமுடியாது என கடுமையாக கூல் சுரேஷ் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்பு கூல் சுரேஷ் அளித்த பேட்டியில்.

இயக்குனர் சங்கர் சார் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் அந்த மாதிரி பேசி இருக்கக் கூடாது, விருமன் படம் நன்றாக இருந்தது. அதனால் ஒரு எமோஷனலில் சங்கர் சார் பொண்ணுக்கு ஆசைப்பட்டு லவ் லெட்டர் கொடுத்து விட்டேன். தயவு செய்து சங்கர் சார் என்னை மன்னித்து விடுங்கள், உங்களைப் பற்றி விமர்சனம் செய்யும் அளவுக்கு இந்த கூல் சுரேஷுக்கு தகுதி இல்லை. என்னை அறியாமல் அதிதியை எனது காதலி என்று சொல்லிவிட்டேன். அதிதி நீ எனக்கு தங்கச்சி தான் வேண்டும் என்று கூல் சுரேஷ் தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்