Monday, April 22, 2024 9:33 pm

விருதுகளை வாரி குவித்த மாமனிதன் படம் !! மொத்தம் எத்தனை விருதுகள் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகிய படம் “மாமனிதன்” ஆகும்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர்ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசை அமைத்திருந்தனர். யுவன் ஷங்கர்ராஜா தன் ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் வாயிலாக இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் இந்த படம் டோக்கியோவில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய படம் எனும் கோல்டன் விருதினை பெற்றிருந்தது. இந்த நிலையில் மாமனிதன் படம் 3 விருதுகளை குவித்துள்ளது. அதாவது, தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த நடிகருக்கான விருதையும், சிறந்த சாதனை விருதையும், விமர்சகர்கள் தேர்வு விருதையும் சேர்த்து மொத்தம் 3 விருதுகளை மாமனிதன் படம் குவித்துள்ளதாக இயக்குனர் சீனுராமசாமி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். விருதுகளை குவித்துவரும் மாமனிதன் படத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்