உண்மையிலேயே பிரதாப் போத்தன் ஆசைப்பட்ட மாதிரியே இறந்துட்டாரு? பிரபல நடிகை கனிகா

0
உண்மையிலேயே பிரதாப் போத்தன் ஆசைப்பட்ட மாதிரியே இறந்துட்டாரு? பிரபல நடிகை கனிகா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் பிரதாப் போத்தன். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை 1985 திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் அமலா என்பவரை 1990ல் திருமணம் செய்து 12 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார். தனிமையில் வாழ்ந்து வந்த பிரதாப் போத்தன் ஒருசில தமிழ், மலையாளப்படங்களில் நடித்து வந்தார். கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் தனியாக வசித்து வந்த பிரதாப் போத்தன், காலையில் வெகு நேரமாகியும் எழ தாமதமானதால் அவர் வீட்டின் சமையல்காரர் காபி போட்டு கொடுக்க போன போது சுய நினைவு இல்லாம இருந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அவர் தட்டி எழுப்பி, தண்ணீரை முகத்தில் தெளித்தும் எழாததால் உடனடியாக பிரதாப்பின் கார் ஓட்டுனரை வழவழைத்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சோதனையில் பிரதாப் போத்தன் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளானர்.

69 வயதான பிரதாப் போத்தன் மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகை கனிகா பிரதாப் போத்தனின் இறுதி அஞ்சலி செலுத்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிக்கொடுத்துள்ளார்.

அதில் கனிகா, அவருடன் மலையாளத்தில் இரு படங்களில் நடித்திருக்கிறேன். அப்போது என்னிடம், நான் மரணமடைந்தால் தூங்கும் போதே அது நடக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோல் அவர் ஆசைப்பட்ட மாதிரியே மரணமடைந்துள்ளார் என கனிகா தெரிவித்துள்ளார்.

No posts to display