Friday, April 26, 2024 1:12 pm

அஜித் கையில் வைத்து இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா !! வைரலாகும் தகவல் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜித் தற்போது ஐரோப்பாவில் உள்ள தனது நண்பர்களுடன் விடுமுறையில் இருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, நடிகர் லண்டன் முழுவதும் பைக் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. எச்.வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட அஜித், ஐரோப்பா முழுவதும் சாலைப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் அஜித் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.நடிகர் அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் தனது BMW பைக்கை எடுத்துக்கொண்டு அஜித் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் சில புகைப்படங்களை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். ஐரோப்பா நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் தற்போது நடந்து வருகிறது. இங்கிலாந்தில் தற்போது இந்த பயணம் நடந்து வருகிறது.

சிலநாட்களுக்கு முன் பிரிட்டன் லண்டன் நகர வீதிகளில் (ஹேட்டன் கிராஸ் நிலையம்) ரசிகர்களுடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில் நடிகர் அஜித் லண்டன் நகரில் ஒரு குழந்தையை கையில் ஏந்திய நிலையில் உள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்துக்கு பின்னணியில் அஜித்தின் மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் காணப்படுகின்றனர். லண்டனில் தற்போது அஜித் குடும்பத்தினர் உடன் நேரம் செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஏகே 61’ படத்தின் மூன்றாவது ஷெட்யூல் இம்மாதம் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில், லண்டனில் விடுமுறை முடிந்து அஜித் விரைவில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஏகே 61’ படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.’ஏகே 61′ படத்திற்குப் பிறகு, அஜித் தனது அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்