அருண் விஜயின் “யானை திரைப்படம் ” வசூலில் கலக்கினாலும் திருப்தி அடையாத அருண் விஜய்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

0
அருண் விஜயின் “யானை திரைப்படம் ” வசூலில் கலக்கினாலும் திருப்தி அடையாத அருண் விஜய்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது தனது மச்சான் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

குடும்ப செண்டிமெண்ட் கதையை படமாக இயக்கம் கில்லாடி ஹரி யானை படத்தை மிகவும் அருமையாக இயக்கி இருந்ததால் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் வெளியாகி 4 நாட்களில் உலகம் முழுவதும் 16 கோடிகளும் தமிழகத்தில் மட்டும் 12 கோடிகளும் வசூல் செய்துள்ளது.

படம் வெளியாகி 7 நாட்கள் ஆகியும் இன்னும் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள். யானை படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு வைத்து பார்க்கையில் அருண் விஜய் சினிமா வாழ்க்கையில் இந்த படம் வசூல் ரீதியில் அவருக்கு மிகப்பெரிய சாதனையை படைத்து கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி யானை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் நடிகர் அருண் விஜய் மிகவும் சோகத்தில் இருக்கிறாராம். ஏனென்றால், இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்துள்ள்ள பார்டர், பாக்ஸர் ஆகி படங்கள் ரிலீஸ் ஆகும் என நம்பி இருந்தாராம்.

ஆனால், தற்பொழுது எவ்வளவு முயற்சி செய்தும் இந்த படங்களை ரெடி செய்ய முடியவில்லையாம். இந்த படங்களுக்கு, ஏதாவது ஒரு தடங்கல் ரிலீஸ் செய்ய வந்து கொண்டே இருக்கிறதாம் அந்த வகையில் யானை படம் நல்ல வரவேற்பு பெற்று வந்தாலும் அருண் விஜய் மட்டும் மிகவும் சோகமாக இருக்கிறாராம்.

No posts to display