உண்மையிலேயே நயன்தாரா – பிரபு தேவாவின் காதல் முறிவுக்கு இந்த நடிகர் தான் காரணமா ? திருமணத்திற்கு பின் உலவும் செய்தி

0
73
nayanthara prabhu deva

நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தற்போது இருவரும் தாய்லாந்தில் ஹனிமூன் சென்றுள்ளார்கள்.

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன், சிம்பு மற்றும் பிரபு தேவாவை காதலித்ததை நாம் அறிவோம். சிம்புவிடம் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பின், பிரபு தேவாவை காதலித்து வந்தார் நயன்தாரா.

இந்த காதல் திருமணம் வரை கூட சென்றது. ஆனால், பிரபு தேவாவின் மனைவி, பிரபு தேவாவிற்கு விவாகரத்து தரமறுத்துவிட்டார். இதன்பின் நடைபெற்ற பல பிரச்சனைகளின் காரணமாக நயன்தாரா – பிரபு தேவா இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

ஆனால், இது மட்டும் நயன்தாரா – பிரபு தேவாவின் காதல் முறிவுக்கு காரணம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆம், நயன்தாராவிடம் சிம்புவுடன் எதற்காக நீ காதல் முறிவு செய்துகொண்டாய் என்று பிரபு தேவா கேட்டதால் கடுப்பான நயன்தாரா, பிரபு தேவாவிடம் இருந்து விலக துவங்கினாராம்.

அதன்பின், பிரபு தேவாவின் மனைவி லாதாவால் ஏற்பட்ட சில பிரச்சனைகள் இருவரும் பிரித்துவிட்டதாக சில தகவல் உலா வருகிறது. எது எப்படியோ, தற்போது திருமணம் முடித்து தனது வாழக்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார் நயன்தாரா..