சும்மா இருந்த சங்கை ஊத்தி கெடுத்த கங்கை அமரன் !! விஜய், அஜித் சேருவதற்கு வாய்ப்பே இல்ல

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்டு அவரவர் வழியில் வெற்றி வாகை சூடி வரும் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். வருடத்தில் இருவரின் படமும் வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக படைத்து விருந்துகளை அள்ளி வழங்குகின்றனர்.

எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ரஜினி, கமல் வரிசையில் அமைந்த இந்த தலைமுறை நடிகர்கள் இவர்கள் மட்டுமே. காரணம் ரசிகர்கள் இவர்கள் மீது வைத்துள்ள அளாதியான பிரியமும் நம்பிக்கையுமே. அதை அவர்களும் இன்னமும் காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் நடிப்பில் அடுத்து தளபதி 66 படமும் ஏகே 61 படமும் காத்து கொண்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் ஒன்றாகவே சினிமா துறையில் நுழைந்து தங்கள் சாதனைகளைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றனர். ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் தான் முதன் முதலில் இருவரும் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரின் மார்க்கெட்டும் எகிற ரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டு சேர்ந்து நடிக்க முடியவில்லை. மேலும் வெங்கட் பிரபுவிடம் இருவரும் இணைய வாய்ப்புள்ளதா என்று ரசிகர்கள் கேட்க இருவரும் தயார் என்றால் நான் படம் பண்ண தயார் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் அப்பாவும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் அண்மையில் விஜய் அஜித் இணைய அது ஒரு பேன் இந்தியா படமாக வெங்கட் பிரபு இயக்க படம் வெளியாகும் என்ற கருத்தை கூறியிருந்தார். இதுவே வெங்கட் பிரபுவிற்கு வினையாக முடிந்து விடும் போலிருக்கிறது. விஜய் , அஜித் சொல்லாமல் இப்படி ஒரு கருத்தை கங்கை அமரன் எப்படி கூற முடியும் என திரைப்பிரபலங்கள் புலம்பி வருகின்றனர். அதே வகையில் விஜய் அஜித் முன் வெங்கட் பிரபு மீண்டும் எப்படி நிற்க முடியும் எனவும் புலம்பி வருகின்றனர்.