உண்மையிலேயே அனிருத்தின் Ex-Lover ஆண்ட்ரியா தான் ? வீடியோவால் மாட்டிக்கொண்ட அனிருத்

0
79

தமிழ் சினிமாவில் 2011ல் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் அனிருத். இசைமைப்பாளர், பாடகர் என்று தற்போது தமிழ் படங்களை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார் அனிருத்.

ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசைமைத்து பல கோடி சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான டாக்டர், பீஸ்ட், விக்ரம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களின் வெற்றிக்கு அனிருத் இசையும் ஒரு காரணம்.மேலும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கும், அஜித்தின் ஏகே61 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளார்.

இப்படியிருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார் அனிருத். அந்தவகையில் நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சுச்சி லீக்ஸ் மூலம் வெளியுலகத்திற்கு தெரியவந்தது. அப்புகைப்படத்தால் பரபரப்பானது தமிழ் திரையுலகம். ரகசியமாக வைத்திருந்த காதல் தொடர்பு இந்த புகைப்படத்தால் அனிருத்தை பலர் கேள்வி கேட்டு வந்தனர்.

அப்படி சில ஆண்டுகளுக்கு முன் காப்பி வித் ரோஸ் நிகழ்ச்சியில் நடிகை நமீதாவுடன் அனிருத் கலந்து கொண்டார். அப்போது உங்கள் காதல் பற்றியும் பிரேக்கப் பற்றியும் திருநங்கை ரோஸ் கேள்வியாக கேட்டார். அதற்கு அனிருத், என்னுடைய முன்னாள் காதலி பெயர் ஆண்ட்ரியா என்றும் எனக்கு 19 வயது அவருக்கு 25 வயதாக இருக்கும் போது காதலித்தோம். அந்த 25 வயது தான் பிரேக்கப்பிற்கு காரணமாக இருந்தது. அது உண்மையான காதல் என்று சொல்ல முடியாது என்று அனிருத் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது அனிருத்துக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதால் பலர் பாடகி ஜோனிதா காந்தி மற்றும் கீர்த்து சுரேஷ் போன்றவர்களுடன் காதலில் இருப்பதால் அவர்களில் ஒருவரை அனிருத் கல்யாணம் செய்து கொள்வார் என்று வதந்திகள் பரவி வருகிறது.