Friday, April 26, 2024 11:20 pm

AK61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் மூத்த நடிகை !! ஏகே 61 படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச் வினோத்துடன் அஜித் தனது 61வது படமாக இணைந்துள்ளார்.

இந்நிலையில் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்ற கேள்வி இணையத்தில் உலாவி வந்தது. தற்போது பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 90களில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக மஞ்சுவாரியர் வலம் வந்தார்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் தனது சொந்த குரலிலேயே மஞ்சுவாரியர் பேசியிருந்தார். இந்நிலையில் மீண்டும் தமிழ் படத்தில் மஞ்சுவாரியர் நடிக்கயுள்ளார்.

சமீப காலமாக அஜித் தொடர்ந்து பாலிவுட் நடிகைகளுடன் நடித்து வந்த நிலையில் தற்போது மலையாள நடிகையுடன் இணைந்துயுள்ளார். மேலும் புனேவில் நடக்க உள்ள படப்பிடிப்பில் மஞ்சு வாரியர் கலந்து கொள்வார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் தொடக்கம் வரை புனேவில் படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது. அசுரன் படத்திலேயே மஞ்சுவாரியர் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் ஏகே 61 படத்திலும் இவருக்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சு வாரியர் படத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார், அதே நேரத்தில் ஜான் கோக்கன், வீரா மற்றும் மகாநதி ஷங்கர் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார், அதே நேரத்தில் தயாரிப்பாளர்கள் முந்தைய இரண்டு படங்களில் இருந்து பெரும்பாலான குழுவினரைத் தக்க வைத்துக் கொண்டனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்