Tuesday, April 30, 2024 10:19 pm

பா ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்தின் முழு விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் ரஞ்சித் எழுதி தயாரித்த இப்படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஹரி கிருஷ்ணன், வினோத், சுபத்ரா ராபர்ட், ஷபீர் கல்லரக்கல், ரெஜின் ரோஸ், தாமு, ஞானபிரசாத், வின்சு ரேச்சல் சாம் மற்றும் அர்ஜுன் பிரபாகரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

பா ரஞ்சித் தனது வரவிருக்கும் திரைப்படமான நட்சத்திரம் நகர்கிறது சிறப்புக் காட்சியை நடத்தினார். திரைப்பட தயாரிப்பாளர்கள் அனுராக் காஷ்யப், நீரஜ் கெய்வான் மற்றும் நந்திதா தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பா.ரஞ்சித் படங்களில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் எப்போதும் தைரியசாலியாகவும், எதையும் துணிந்து, தனித்து செய்யும் வல்லமை படைத்தவர்களாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு துணிச்சல் மிக்க பெண்ணாக ரெனே என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் துஷாரா விஜயன். இதற்கு முன்பு சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் பாராட்டப்பட்ட துஷாரா அதைவிட கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரத்தை இந்த படத்தில் ஏற்று தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக இந்த படத்தின் ஒரு நட்சத்திரமாகவே அவர் மின்னுகிறார்.

இனியன் என்னும் கதாப்பாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராமன் நடித்துள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை நேர்த்தியாக காளிதாஸ் கையாண்டு தன்னுடைய பெஸ்ட்டை பதிவு செய்துள்ளார்.

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இளையராஜா பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதே போல புத்தர் சிலை, மாட்டுக்கறி, சாதி அரசியல், காட்டுப்பூனை, நாட்டுப்பூனை என பா ரஞ்சித்தின் அரசியலும் அதற்கான வசனங்களும் கவனத்தை பெறுகிறது. குறிப்பாக ஆணவ கொலைகள் செய்யப்பட்ட கோகுல்ராஜ், இளவரசன் உள்ளிட்ட பலரது மரணங்களுக்கு பின்னால் உள்ள சாதி அரசியலும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிர் கருத்து உள்ளவர்களுக்காகவும் குரல் கொடுக்கிறது இந்த திரைப்படம் என ஒரு புதிய விவாதத்தையும் உருவாக்க முயற்சி செய்துள்ளார் பா.ரஞ்சித்.

முதல் பாதி காதல் பற்றிய புரிதலை உருவாக்க முயற்சி செய்திருந்தாலும் அது சரியான விதத்தில் அமையவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இரண்டாம் பாதி இயக்குனரின் அரசியல் தெளிவை வெளிப்படுத்தி உள்ளது. சில காட்சிகள் ஆவணப்படம் போன்ற உணர்வை கொடுப்பதால் நம்மையும் அறியாமல் சலிப்பு தட்டுகிறது.

காதல் என்னும் அன்பை சாதி, மதம், பாலினம், கலாச்சாரம், மொழி இவற்றை எல்லாம் காரணம் காட்டி பிரிக்க வேண்டாம் என்பதே இந்த படத்தின் மூலமாக இயக்குனர் சொல்ல வருவது. மொத்தத்தில் பா ரஞ்சித் உருவாக்கிய இந்த காதல் நட்சத்திரம் மின்னிக் கொண்டே நகர்கிறது.

நட்சத்திரம் நகர்கிரது ஒரு தியேட்டர் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் பாலினத்திலிருந்து வினோதமான காதல் வரையிலான காதலை ஆராய்கிறது. காதல் கருப்பொருளுடன் இணைக்கப்பட்ட சாதி அரசியலையும் படம் மையமாகக் கொண்டுள்ளது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஹரி கிருஷ்ணன், வினோத், சுபத்ரா ராபர்ட், ஷபீர் கல்லரக்கல் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவும், செல்வா ஆர்.கே படத்தொகுப்பும் செய்துள்ளார். தென்மா இசையமைத்துள்ளார். யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்