Sunday, April 28, 2024 5:59 am

லிங்குசாமியை நம்ப வைத்து மோசம் செய்தது இந்த வாரிசு குடிமத்தினரா ? பரபரப்பில் கோடம்பாக்க வட்டாரம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான வணிக இயக்குனர்களில் ஒருவரான என். லிங்குசாமி சமீபத்தில் ராம் பொதினேனி மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்த தமிழ்/தெலுங்கு இரு மொழிகளில் ‘தி வாரியர்’ படத்தை இயக்கினார். திருப்பதி பிரதர்ஸ் புரொடக்‌ஷன் ஹவுஸுக்குச் சொந்தமானவர், இது பல வெற்றிப் படங்களைத் தயாரித்தது மற்றும் வழிபாட்டு கிளாசிக்ஸை விநியோகித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளால் நிதி நெருக்கடியில் சிக்கி நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொண்டது. பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமா தொடர்ந்த வழக்கு ஒன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. செக் பவுன்ஸ் வழக்கில் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் 2013ஆம் வருடம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தை லிங்குசாமி தலையில் கட்டிவிட்டு அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்தார் மணிரத்தினம். ஆனால் கடல் படத்தை இருந்து வாங்கி விநியோகம் செய்த இயக்குனர் லிங்குசாமி மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார். இருந்தும் இந்த நஷ்டத்தை சரி செய்ய மணிரத்தினத்திடம் லிங்குசாமி அணுகியுள்ளார்.

ஆனாலும் மணிரத்தினம் அதெல்லாம் எனக்கு தெரியாது என ஒதுங்கி கொண்டார். லிங்குசாமி முதல் முதலில் பெரும் தொகையை இழந்தது மணிரத்தினத்தின் கடல் படத்தில் இருந்து தான். இருந்தும் பெரும் நம்பிக்கையுடன் சூர்யாவை வைத்து அஞ்சான் படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கி இருந்தார் லிங்குசாமி. இந்த படம் மேலும் அவருக்கு நஷ்டத்தை கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உத்தமன் வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமி, கமலஹாசனின் ஒரு ரசிகனாக இந்த படத்தை தயாரித்து, கமல்ஹாசன் என்ன கேட்கிறாரோ அதை தயாரிப்பு தரப்பில் இருந்து செய்து கொடுத்தார் லிங்குசாமி. ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. உத்தம வில்லன் படம் வெளியாவதற்கு முன்பு பண சிக்கலை சந்தித்து படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இப்படி ஒரு சிக்கலில் லிங்குசாமி இருக்கும் போது, அவருக்கு உதவும் வகையில் நடிகர் கார்த்திக் ஒரு படம் லிங்குசாமிக்கு நடித்து தருவதாக உறுதியளித்துள்ளார். சூர்யாவும் தம்பி கார்த்திக் நிச்சயம் உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுப்பார், எதாவது செய்து உத்தமவில்லன் படத்தை வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் என நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்கள் சூர்யா மற்றும் கார்த்திக்.

கார்த்திக் கால் சீட் கொடுக்கிறார் என்ற நம்பிக்கையில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு நிறுவனத்திடம் கடனாக பெற்று உத்தமவில்லன் படத்தை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. ஆனால் உத்தமவில்லன் படம் தோல்வியை தழுவி மேலும் லிங்குசாமிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்த லிங்குசாமியை, நம்ப வைத்து கடைசிவரையும் கால் சீட் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் கார்த்திக்.

இதனால் வாங்கிய கடனை கார்த்தி கால் சீட் கொடுப்பார் அந்தப் படத்தில் வெற்றியை மூலம் கடனை அடைத்து விடலாம் என்கின்ற நம்பிக்கையில் இருந்த லிங்குசாமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனைத் தொடர்ந்து கடனை அடைக்க முடியாமல் காலம் தாமதம் செய்து வந்த லிங்குசாமிக்கு எதிராக கடன் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்து தற்பொழுது லிங்குசாமிக்கு சிறை தண்டனையும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் கார்த்தி, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னி ஏழு நாட்கள்’ படத்தை தயாரிக்க பிவிபி நிறுவனத்திடம் சில வருடங்களுக்கு முன் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் தொகையை திருப்பிச் செலுத்தாததாலும், சகோதரர்கள் வழங்கிய காசோலை வங்கியில் இருந்து பணம் இல்லாமல் திரும்பியதாலும் நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுத்தது. லிங்குசாமியும் அவரது சகோதரரும் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான சம்பிரதாயங்களை ஆரம்பித்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

- Advertisement -

சமீபத்திய கதைகள்