- Advertisement -
இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.21) உயர்வுடன் தொடங்கியது. அதன்படி, வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 205.31 புள்ளிகள் உயர்ந்து 65,860.50 ஆக வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76.90 புள்ளிகள் உயர்ந்து 19,770.90 ஆக வர்த்தகம் ஆகிறது.
மேலும், இந்த டாடா பவர், ஐஜிஎல், டெக் மகேந்திரா ஆகிய பங்குகள் உயர்வில் வர்த்தகமாகிறது. இந்த உயர்வுக்கு, உலக பொருளாதாரம் மீதான நம்பிக்கை அதிகரிப்பு, அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் உயர்வு ஆகியவை காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இப்படித் தொடர்ந்து உயர்ந்து வந்தால் வர்த்தக முதலீட்டாளர்களுக்கு லாபம் அதிகரிக்கும் எனக் கூறி வருகின்றனர்.
- Advertisement -