- Advertisement -
உத்தரப்பிரதேசம் மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை, சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்து கோடாரியால் வெட்டிக் கொலை செய்த நபரால் நாடே பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.
அதன்படி , சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த குற்றவாளி பவான் நிஷாத், தற்போது 19 வயதாகும் அப்பெண்ணிடம் வழக்கைத் திரும்பப் பெற மிரட்டியுள்ளார். இதற்கு மறுத்ததால் தனது சகோதரர் அஷோக் உடன் இணைந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
தற்போது பவானின் சகோதரர் அஷோக் வேறொரு கொலை வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்தவர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்
- Advertisement -