- Advertisement -
சென்னை நகரம் இன்று விடிய விடியப் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை நகரம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது.
அதன்படி, இந்த திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, பாரிமுனை, சைதாப்பேட்டை, தியாகராய நகர், அடையாறு, கோடம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் இரவுமுதல் மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் சென்னை நகரத்தின் வெப்பநிலை குறைந்து குளுமையாகக் காணப்படுகிறது. மழையால் சாலைகளில் தேங்கிய நீர் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், இன்று சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -