Thursday, December 7, 2023 9:27 am

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது கலைஞர் நூற்றாண்டு விழா!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் திரையுலகம் சார்பில் டிசம்பர் 24ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் தமிழ் திரையுலக பிரமுகர் தேனாண்டாள் முரளி நேற்று (நவம்பர் 21) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, ” கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வசதியாகச் சென்னை சேப்பாக்கம் மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தில் 1 லட்சம் பேர் அமர்ந்து பார்க்க வசதியாக ஏற்பாடுகள் செய்யப்படும். அந்த நாளான டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் மழை இருக்காது என நம்புகிறோம். மழை பெய்தால், ஏற்பாடுகள் மாற்றி அமைக்கப்படும்.

முதலில் நிகழ்ச்சிக்கு வர முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களின் தொடர் வலியுறுத்தலால் பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சியில் கலைஞரின் வாழ்க்கை வரலாறு, அவரின் படைப்புகள், அவர் செய்த சாதனைகள் ஆகியவை குறித்து விளக்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில், கலைஞருடன் பணியாற்றிய திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என இவ்வாறு பேசினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்