- Advertisement -
சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று (நவம்பர் 21) தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த மாவட்டங்களில், இன்று மாலை முதல் நாளை (நவம்பர் 22) மாலை வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மக்கள், இந்த மழை எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
- Advertisement -