சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வங்கக்கடலின் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் இன்று (நவ.20) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வேப்பேரி, சென்ட்ரல், புளியந்தோப்பு, எழும்பூர், MRC நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் சென்னையின் வெப்பநிலை குறைந்துள்ளது. காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்த மழை நீர் தேங்கும் இடங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்