ஆசியாவின் பழமையான மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவான இந்தியச் சர்வதேச திரைப்பட விழா (IFFI), 2023 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் மொத்தம் 270க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் இந்திய, வெளிநாட்டுத் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், திரைப்பட விமர்சனங்கள், திரைப்படத் தயாரிப்பு தொடர்பான பயிற்சிகள் போன்றவை இடம்பெறும்.
மேலும், இந்த விழாவின் தொடக்க விழாவில் இன்று நடைபெறும் தொடக்க விழாவில் சல்மான்கான், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.
அதைப்போல், இந்த விழாவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்க்கு ‘சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விழா’ வழங்கி கவுரவிக்கப்பட உள்ளார். மேலும், இந்திய நடிகர்கள் ஹேமா மாலினி, பிரசூன் ஜோஷி ஆகியோர் ‘இந்தியத் திரைப்பட ஆளுமை விருது’ வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர்.
இந்த விழாவில் பங்கேற்க விரும்பும் ஊடகத்துறையினர், IFFIயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.