- Advertisement -
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில், ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடு, கடந்த 53 நாட்களாக ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் கோரினர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. வெங்கடேஸ்வர ராவ், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களின் சந்திப்பில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
- Advertisement -