- Advertisement -
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் இன்று (நவ.20) சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
இந்த நிலையில், மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
- Advertisement -