- Advertisement -
ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழந்தது.
இந்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. சந்தூர் கிராமத்திலிருந்து செல்லும் சாலையில், சாலையைக் கடக்க முயன்ற பெண் சிறுத்தை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில், பெண் சிறுத்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து சித்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் வனவிலங்குகள் சாலை விபத்துகளில் உயிரிழப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் வனவிலங்குகள் சாலை விபத்துகளில் 11,000க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -