- Advertisement -
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (DTE) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று (நவ .14) நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு தேர்வு தேதி விரைவில் http://dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகளில் பங்கேற்கத் தயாராக இருந்த மாணவர்கள் இந்த தகவலை அறிந்து கொள்ளவும், மறு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதும் அதற்கேற்ப தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -