Sunday, December 3, 2023 1:18 pm

பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் : பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர் சந்தித்துப் பேசினார். அதில், அவர் ”மழையால் அணைகள் நிரம்பினால், உடனடியாக தண்ணீர் திறந்துவிடும்போது, அது கரையோர மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிவிட்டு, பின்னர் தண்ணீர் திறக்க வேண்டும்.

இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் முறையாக அமல்படுத்த வேண்டும். கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடும்போது, அது அவர்களால் புரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும். மேலும், அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் பருவமழையால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படாத நிலையைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது,  தமிழ்நாடு முழுவதும் 400 பேரிடர் மீட்பு படை குழு, 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன, மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரே, அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஆட்சியர்களுக்கு உத்தரவு, அணை நிலவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன,  வானிலை மையத்துடன் இணைந்து, அதற்கேற்றவாறு மழை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பேட்டியளித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்