திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று (நவம்பர் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பில், “திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும், மின்சார தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, இன்று (நவம்பர் 10) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார்ப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மாணவர்கள், வீட்டிலிருந்தபடியே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
அதைப்போல், காரைக்காலில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை என்றும், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அந்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சற்றுமுன் அறிவித்துள்ளார்