பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் வெளியான சில முக்கிய புள்ளி விவரங்கள், பீகாரில் மொத்த மக்கள் தொகை 13.07 கோடியாக உள்ளது. இதில், 6.53 கோடி பேர் ஆண்கள், 6.54 கோடி பேர் பெண்கள். பட்டியலின மக்களின் மக்கள் தொகை 3.65 கோடியாக உள்ளது.
மேலும், அந்த பட்டியலில், பழங்குடியினரின் மக்கள் தொகை 1.62 கோடியாக உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மக்கள் தொகை 3.1 கோடியாக உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் மக்கள் தொகை 3.2 கோடியாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீகாரில் மொத்த மக்கள் தொகையில் 45.78 லட்சம் பேர் மற்ற மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதில், 2.17 லட்சம் பேர் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். 13.07 கோடி மக்கள் தொகையில், 12.48 கோடி பேருக்குச் சொந்தமாக வாகனம் இல்லை. 59 லட்சம் பேருக்கு மட்டுமே சொந்தமாக வாகனம் உள்ளது எனத் தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் பீகாரில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான தகவல்களை வழங்குகின்றன. இந்த தகவல்களைப் பயன்படுத்தி, அரசு சமூக நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கூறியுள்ளனர்